Misc

இந்த நான்கு ஆப் உங்க போனில் வைத்திருந்தால் உங்க பேங்க் பேலன்ஸ் காலி! வங்கியே அறிவிச்சுட்டாங்க பாத்து சூதனமா நடந்துக்கோங்க!

Sep 13 2021 09:53:00 PM

நம்ம எந்த அளவுக்கு மொபைல் போன்களை உபயோகப்படுத்துகிறோமோ அதே அளவுக்கு நமக்கு பிரச்சனைகளும் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. ஒரு வகையில் நம் உடலுக்கும், கண்களுக்கும் போன் பிரச்சனை ஏற்படுத்தும் என்று சொன்னாலும், நம்ம பேங்க் பேலன்ஸையும் காலி பண்ணிவிடும் என்று அண்மையில் செய்திகள் வெளிவந்துள்ளன.

sbi remote app hack phone

வேற எந்த பேங்க்கும் அறிவிக்கவில்லை, அரசு வங்கியான SBI வங்கியே இந்த ஆப்களை உங்கள் போனில் வைத்திருக்க வேண்டாம் என்று அறிவித்துள்ளது. AnyDesk, Quick Support, Teamviewer மற்றும் Mingleview போன்ற ஆப்களை போனில் பதிவிடக்கம் செய்யவேண்டாம் என்று SBI வங்கி அறிவித்துள்ளது. இந்த ஆஃப்களை வைத்திருந்த 150 வாடிக்கையாளர்களின் வங்கிக்கணக்கில் இருந்த பல லட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்து திருடி உள்ளனர்.

sbi remote app hack phone

முதலில் இந்த ஆப் எல்லாம் என்ன என்று பார்க்கலாம். இந்த ஆப்கள் மூலம் நாம் அடுத்தவர் போனில் என்ன உள்ளது என்பதை தெளிவாக பார்க்கமுடியும். மோசடி செய்யும் நபர்கள் இந்த ஆப்பை நம் போனில் இன்ஸ்டால் செய்யச் சொல்லி நம்முடைய போனை ஹேக் செய்து பணத்தை கொள்ளையடிக்கின்றனர். மீறி நீங்க இந்த செயலியை உங்கள் போனில் வைத்திருந்தால் உங்க காசு காலியாவதை யாராலும் தடுக்க முடியாது.

sbi remote app hack phone