Lushgreen

சார்பட்டா பரம்பரை படத்தை அதிமுகவினர் எ*திர்க்க காரணம் என்ன?

Jul 29 2021 01:09:00 PM

கடந்த வாரம் அமேசான் பிரைமில் சார்பட்டா பரம்பரை திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்ப்பை பெற்று வருகிறது. இந்த படத்தை சாதாரண ரசிகர்கள் மட்டுமல்லாமல் திமுக கட்சியினரும் கொண்டாடி வருகின்றனர்.  படத்திற்கு அமோக ஆதரவு இருந்து வந்தாலும் அதிமுக தரப்பினர் இந்த படத்தை க*டுமையாக வி*மர்சனம் செய்துவருகின்றனர். அதிமுக எ*திர்க்கும் அளவிற்கு இந்த படத்தில் அப்படி என்ன தான் இருக்கு?

sarpatta parambarai arya pasupathi dmk admk

படம் வெளியான உடனே திமுக கட்சியின் உதயநிதி ஸ்டாலின் படத்திற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டார். இதில் இருந்து படத்தில் திமுக சம்மந்தமான எந்த விதமான த*வறான விஷயங்களும் படத்தில் காட்டப்படவில்லை என்பது தெளிவாகிறது. படத்தில் நடிகர் ஆர்யா மற்றும் அவருடைய குரு பசுபதி இருவரும் திமுக கட்சியை சேர்ந்தவர்கள் என்று காட்டியுள்ளனர். கலைஞர் ஆட்சி க*லைக்கப்பட்ட போது பசுபதி மி*சாவில் கை*தாவதை போல காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

sarpatta parambarai arya pasupathi dmk admk

பசுபதி மூச்சுக்கு முன்னூறு தடவை தான் ஒரு திராவிட கட்சியை சேர்ந்தவர் என்பதையும், கலைஞர் எப்போதும் நம்மை கைவிட மாட்டார் என்றும் சொல்கிறார். படத்தில் மாஞ்சா கண்ணன் என்ற ஒரு கேரக்டர். கொ*ரோனா காலத்தில் ம*றைந்த மாறன் இந்த கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர் எம்.ஜி.ஆர் போல வசனம் பேசி அதிமுக கட்சியை சேர்ந்த நபராக நடித்துள்ளார். இந்த கதாப்பாத்திரம் மாஞ்சா கண்ணனை குறிக்கிறதா? அல்லது நேரடியாக எம்.ஜி.ஆரை குறிக்கிறதா? என்பதை படத்தில் தெளிவாக காட்டவில்லை.

sarpatta parambarai arya pasupathi dmk admk

திமுக ஆட்சி க*லைந்தவுடன் அதிமுக அரசு ஆட்சி கட்டிலில் ஏறுகிறது. அப்போது பாக்ஸிங் விளையாடுவது குறைந்து எல்லா பாக்ஸர்களும் அதிமுக கட்சியில் இணைந்து சா*ராயம் கா*ச்சுவதைப் போலவும், அதிமுக கட்சியை சேர்ந்த நபர்களுக்கு அ*டி*யாட்களாக இருப்பதைப் போலவும் காட்டியுள்ளனர். இந்த விஷயம் தான் அதிமுக தொண்டர்கள் இந்த படத்தை எ*திர்க்க முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

sarpatta parambarai arya pasupathi dmk admk

கு*த்துச் ச*ண்டை யாரும் போடவேண்டாம், எல்லாம் எங்க கட்சிக்கு வந்து அ*டி ஆட்களாக இருங்கள் என்பதைப் போல முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். செயல்பட்டார் என்பதை படத்தில் காட்டியுள்ளனர். நம்ம முன்னாள் மீன்வள துறை அமைச்சர் கூட சமீபத்தில் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். எம்.ஜி.ஆர். கு*த்துச் ச*ண்டை போட்டியில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். கு*த்துச் ச*ண்டை வீரர் முஹம்மது அலி இந்தியா வந்திருந்தபோது அவரை தன்னுடைய ராமாவரம் இல்லத்திற்கு அழைத்து சென்று மீன்குழம்பு பரிமாறினார். அந்த அளவுக்கு தலைவருக்கு கு*த்துச் ச*ண்டை போட்டிகளின் மீது ஆர்வம் அதிகம். அவரைப் பற்றி ரஞ்சித் த*வறாக படத்தில் சித்தரித்து விட்டார் என்று சொல்லியுள்ளார். இந்த காரணங்களால் தான் அதிமுகவினர் சார்பட்டா பரம்பரை படத்தை எ*திர்க்கிறார்கள் என்ற பேச்சு அடிபடுகிறது.

sarpatta parambarai arya pasupathi dmk admk