Lushgreen

பிச்சைக்காரனை விட சரத்குமார் எந்த வகையில் கொறஞ்சு போனவரு! இத்தனை வருட சினிமா வாழ்க்கையில் சரத்குமாரும், பாரதி ராஜாவும் இணையாமல் போனதற்கு என்ன காரணம் தெரியுமா?

Oct 11 2021 04:47:00 PM

தமிழ் சினிமாவில் இயக்குனர் இமயமாக விளங்குபவர் பாரதிராஜா. இவருடைய இயக்கத்தில் நடித்து தான் ரஜினி, கமல் போன்றோர் முன்னணி நட்சத்திரங்களாக தமிழ் சினிமாவில் ஜொலித்தார்கள். எந்த ஒரு முன்னணி நடிகராக இருந்தாலும் ஒரு முறையாவது இவருடைய இயக்கத்தில் நடித்துவிட வேண்டும் என்கிற ஆசை கண்டிப்பாக இருக்கும்.

sarath kumar bharathi raja movie not happen

90களில் முன்னணி நடிகராக வளம் வந்தவர் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார். இவருக்கும் பாரதி ராஜா படத்தில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை இல்லாமல் இருந்திருக்காது. பாரதி ராஜா சரத்குமாருக்காக டபுள் ஆக்சன் கதையை தயார் பண்ணி படம் எடுக்க முயற்சி செய்துள்ளார். சரத் குமாருக்கும் அந்த கதை ரொம்ப பிடித்துப்போகவே படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். கதை தேர்வு, நடிகர் நடிகைகள் தேர்வு எல்லாமே முடிந்து படப்பிடிப்பு  ஆரம்பமாக இருந்தது.

sarath kumar bharathi raja movie not happen

அந்த நேரத்தில் காவேரி பிரச்சனை ஆரம்பமானது. அப்போது சரத்குமார் மற்றும் பாரதி ராஜா இடையே எதிர் கருத்துக்கள் தோன்றி இருவரும் ஒருவரை ஒருவர் திட்டிக்கொள்ள ஆரம்பித்துள்ளனர். அதுவும் ஒரு முறை இரு முறை அல்ல, எங்க பாத்தாலும் கண்டபடி திட்டிக் கொண்டனர். சில நாட்கள் கழித்து அந்தப்படத்தின் தயாரிப்பாளர் பாரதி ராஜாவிற்கு போன் பண்ணி படத்தை ஆரம்பிக்கலாமா என்று கேட்டுள்ளார்.

sarath kumar bharathi raja movie not happen

ஒரு பிச்சைக்காரனை கூட என் படத்தில் ஹீரோவாக அறிமுகம் செய்வேன், ஆனா அந்த சரத்குமாரை மட்டும் இனி எப்பவும் என் படத்தில் ஹீரோவாக நடிக்க வைக்க மாட்டேன். என் வயசு என்ன, என்னுடைய அனுபவம் என்ன, என்னை இப்படி மோ*சமா பேசிட்டான், இனி எப்பவுமே அவன்கூட படம் பண்ண மாட்டேன் என்று திட்ட வட்டமாக தெரிவித்துவிட்டார். இந்த சம்பவம் நடந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால் இன்றுவரை இவங்க ரெண்டு பேரும் பேசிக்கொள்வதில்லை என்று சினிமா துறையில் சொல்கிறார்கள்.

sarath kumar bharathi raja movie not happen