Misc

மற்ற பிராண்ட் டிவிக்களை விட சாம்சங், LG போன்ற பிராண்டட் கம்பெனி பொருட்கள் மட்டும் ஏன் விலை அதிகமாக இருக்கிறது?

Jun 09 2021 11:44:00 AM

சாதாரண மொபைல் போனில் இருந்து நாம் அன்றாடம் பயன்படுத்தும் டிவிக்கள் வரை சாம்சங், LG போன்ற கம்பெனிகள் தரமான பொருட்களை விற்பனை செய்கிறார்கள். இப்போ நம்ம சாதாரணமாக ஒரு ரெட்மி மொபைல் போன் வாங்குகிறோம் என்றால் அந்த போனின் விலையை விட சாம்சங் கம்பெனி மொபைல் போனின் விலை அதிகமாக இருக்கும்.

samsung led price

வெறும் தரம் மட்டும்தான் இந்த விலை உயர்வுக்கு காரணமா என்று பார்த்தால் தரமும் ஒருவகையில் காரணம் தான். என்னதான் நீங்கள் எவ்வளவு விலை கொடுத்து ரெட்மி போன் வாங்கினாலும் அந்த போனில் ஹீட்டிங் பிரச்சனை இருக்கத்தான் செய்யும். அதே சிறப்பம்சங்கள் கொண்ட சாம்சங் போனின் விலை அதிகமாக இருந்தாலும் சாம்சங் மொபைல்களில் ஹீட்டிங் பிரச்சனை சுத்தமாக இருக்காது.

samsung led price

ரெட்மி போன்ற கம்பெனிகள் தற்போது டிவி விற்பனைக்கும் வந்துவிட்டன. மிக அதிக சிறப்பம்சங்கள் கொண்ட டிவிக்கள் மிகக்குறைந்த விலையில் கிடைத்தாலும் மக்கள் பிராண்டட் பொருட்களையே அதிகம் தேடித் சென்று வாங்குகிறார்கள். என்னிடம் சாம்சங், ஹானர் இரண்டு மொபைல்கள் உள்ளன. நான் சாம்சங் மொபைல் வாங்கி 5 வருடத்திற்கு மேல் ஆகிறது. இதுவரை அந்த மொபைல் போனில் பேட்டரி பிரச்சனை மட்டும்தான் வந்தது.

samsung led price

அதையும் நான் சாதாரண மொபைல் கடையில் பேட்டரி மாற்றிய பிறகு தற்போது வரை சிறப்பாக வேலை செய்கிறது. ஆனால் வெறும் 2 வருடங்களுக்கு முன்னர் வாங்கிய ஹானர் போனின் display மற்றும் பேட்டரி பழுதாகிவிட்டது. எங்கு கேட்டாலும் இந்த ஜாமான் கிடைக்காது என்று சொல்கிறார்கள். ஒரு பொருளின் விலை எவ்வளவு மலிவானதாக இருக்கும் என்று பார்ப்பதை விட நாம் ஒரு பொருளை வாங்கும் முன்னர் வருங்காலத்தில் இந்த பொருளில் கோ ளாறு ஏற்பட்டால் அதை சரி செய்ய ஜாமான் கிடைக்குமா என ஒரு தடவைக்கு பத்து தடவை யோசித்து வாங்குவது சிறந்தது.

samsung led price

பிராண்டட் பொருட்களை வாங்குவதால் அந்த பொருளும் தரமானதாக இருக்கும், அந்த பொருளில் ஏதேனும் குறைபாடு ஏற்பட்டால் அதை சரி செய்ய மார்க்கெட்டில் ஜாமான்களும் எளிதில் கிடைத்துவிடும். எலக்ட்ரானிக் பொருட்கள் வாங்குவதற்கு முன்னர் இதுபோல அனைத்து விஷயங்களையும் யோசித்து வாங்குவது சிறந்தது.

samsung led price