Lushgreen

கவர்ச்சி சுனாமியை கட்டவிழ்த்து விட்ட இந்த பெண் கோலிவுட்டா? இல்லை ஹாலிவுட்டா?

Apr 04 2021 09:52:00 AM

படுகவர்ச்சியாக போஸ் கொடுத்து அந்த புகைப்படங்கள் மூலம் அனைவரையும் சுண்டி இழுப்பது பெரும்பாலும் எல்லா ஹீரோயின்களும் கடைப்பிடிக்கும் ஒரு யுக்தியாகும். ஒரு சிலர் மட்டுமே ஹோம்லி ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கும் கோலிவுட்டில் தற்போது ஏகப்பட்ட கவர்ச்சிக்கன்னிகள் படையெடுக்க துவங்கியுள்ளனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் என்றால் அது சாக்ஷி அகர்வால் தான்.

sakshi-agarwal-latest

தனது ஆரம்ப காலத்தில் பல படங்களில் சிறிய வேடங்களில் நடித்தார் சாக்ஷி. காலா, ராஜா ராணி, விஸ்வாசம் போன்ற பல படங்களிலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புகழ் பெற்ற பிறகு பல படங்களில் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்து வருகிறார். இந்த வருடம் வெளியான குட்டி ஸ்டோரி மற்றும் டெடி படங்களில் நடித்திருந்தார் சாக்ஷி.

sakshi-agarwal-latest

சின்ட்ரேலா, ஆயிரம் ஜென்மங்கள், அரண்மனை 3 படங்கள் அவரது நடிப்பில் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. இன்ஸ்டாகிராமில் 1 மில்லியன் பாலோயர்களை கொண்டுள்ளார் இவர். கண்ணை பறிக்கும் கவர்ச்சியில் இவரை மிஞ்ச எவரும் கிடையாது. எப்போதும் படு சூடான புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்பும் சாக்ஷி தற்போது கவர்ச்சியின் எல்லைக்கே சென்றுவிட்டார். சமீபத்தில் இன்ஸ்டாவில் வெளியிட்ட புகைப்படத்தில் எல்லையற்ற கவர்ச்சியை அள்ளித்தெளித்து அமர்ந்திருக்கிறார். இந்த புகைப்படங்களை பயங்கரமாய் ரசித்து ட்ரெண்ட் வருகின்றனர் நெட்டிசன்கள். கிட்டத்தட்ட ஹாலிவுட் நாயகிகள் அளவுக்கு கவர்ச்சியில் புகுந்து விளையாடிருக்கிறார் சாக்ஷி அகர்வால்.