Misc

எங்க தான் போகுது இந்த உலகம்? இதில் கூடவா கலப்படம் செய்யுறாங்க? கர்ப்பிணி பெண்களே உஷார்!

Sep 22 2021 10:56:00 AM

பொதுவாக கர்ப்பகாலத்தில் குழந்தை சிகப்பாக பிறக்க வேண்டும் என்று பெண்கள் ஆசைப்படுவது இயற்கையானது தான். அதற்காக அவர்கள் நாடும் யுக்திகளில் முக்கியப்பங்கு வகிப்பது தான் குங்குமப்பூ. இதன் விசேஷத்தினால் தான் குழந்தை சிகப்பாக பிறக்கும் என்று சிலர் நம்புகின்றனர். ஆனால், இந்த குங்குமப்பூவில் போலிகள் உள்ளது என்று சொன்னால் நம்பமுடிகிறதா?

saffron-originality pregnant-women

இது முற்றிலும் உண்மை. தற்போது இருக்கும் அறிவியல் உலகில் அனைத்து விஷயங்களிலும் கலப்படம் மிகவும் எளிமையாகிவிட்டது. அதற்கு குங்குமப்பூ மட்டும் விதிவிலக்கா என்ன? அப்படியானால் குங்குமப்பூவை தவிர்த்து விடலாமா என்று உங்களுக்கு தோன்றும். இந்த குழப்பத்துக்கான தீர்வு நம்மிடமே உள்ளது.

saffron-originality pregnant-women

போலிகளை கண்டறிந்துவிட்டாலே போதும். பெரும்பாலான கடைகளில் விற்கப்படும் குங்குமப்பூ அடர் சிகப்பு நிறத்தில் இருக்கும். அதனை வாங்கியவுடன் அதனுடைய வாசத்தை முதலில் நுகருங்கள். அதில் தேன் போன்ற ஒருவித இனிப்பு கலந்த வாசனை தென்பட்டால் அது உண்மையான குங்குமப்பூவாக இருக்கும். சரி வாசனையை வைத்து கண்டுபிடிக்க முடியமா? என்றால், வெறும் 20% மட்டுமே உண்மையானதாக இருக்கும்.

saffron-originality pregnant-women

அடுத்தபடியாக அதனை சிறிது நாக்கில் வைத்து சுவைத்து பாருங்கள். அதன் சுவை பிடிக்கும்படி இருக்க கூடாது. உண்மையான குங்குமப்பூவின் சுவை இனிப்பாக இருக்காது. இவ்வாறு செய்யும்போது 40% உண்மைத்தன்மையை கண்டறியலாம். அதனை வாங்கி வந்தவுடன் வீட்டில் இருக்கும் சூடான தண்ணீரில் கலக்கும்போது, தண்ணீரின் நிறம் சற்று தங்க நிறத்தில் மாறும். அடுத்த 12 முதல் 24 மணிநேரத்துக்கு மெல்லிய வாசனையுடன் அந்த நிறம் நீடித்தால் அது உண்மையானது. இப்போது 60% உண்மை தன்மையை கண்டறிந்துவிட்டோம்.  

saffron-originality pregnant-women

அடுத்ததாக கொஞ்சம் குங்குமப்பூவை வீட்டில் பயன்படுத்தப்படும் சமையல் சோடாவோடு சேர்த்து தண்ணீரில் கலந்து பாருங்கள். அது மஞ்சள் நிறத்தை வெளிப்படுத்தினால் உண்மையான குங்குமப்பூ, மாறாக வெளிர் சிவப்பு நிறத்தை வெளிப்படுத்தினால் அது போலியானது. இப்படி செய்யும்போது 100% அதன் உண்மைத்தன்மையை சோதிக்கலாம். எனவே கர்ப்பிணிகளே, உஷாராக இருங்க. சரியான பொருளை தேர்வு செய்து சாப்பிடுங்க.