Misc

கையில் சாமி கயிறு கட்டுவது நல்லதா? கெட்டதா? சில மாநிலங்களில் இந்த கயிறை வைத்து ஜாதியை அடையாளம் காட்டுகிறார்களே!

Sep 15 2021 06:11:00 PM

நம்ம ஊரில் உள்ள மக்களுக்கு பக்தி ரொம்ப அதிகம். எங்கயாவது கோவிலுக்கு போனால் உடனே அங்க இருந்து சாமி கயிறு வாங்கி வந்து கைகளில் கட்டிக்கொள்வார்கள். நம் இந்தியாவில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் இந்த கயிறை வைத்து அவன் என்ன ஜாதி என்று கண்டுபிடிப்பார்கள். அதாவது மஹாராஷ்டிரா மாநிலத்தில் கீழ் ஜாதி மக்களை அடையாளம் கண்டுபிடிப்பது எப்படி என்பதற்காக கைகளில் கயிறு கட்டுவது வழக்கத்தில் இருந்தது.

saamy kayiru hand

நம்ம அம்பேத்கார் அய்யா இந்த கயிறு காட்டும் முறையை எ*திர்த்து நிறைய விஷயங்கள் செய்துள்ளார். கயிறு கட்டுவதால் கடவுள் நம்முடன் இருப்பார் என்று சொல்வதெல்லாம் உண்மை கிடையாது. கடவுள் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார், அப்புறம் எப்படி இந்த கயிருக்குள் வந்தார் என்பதை சிந்தித்து பார்ப்பது சிறந்தது.

saamy kayiru hand

கையில் கயிறு கட்டுவதால் தோல் சம்மந்தமான நிறைய பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உதாரணமாக கையில் இறுக்கமாக கயிறு கட்டுவதால் ரத்த ஓட்டம் நம் கைகளுக்கு முறையாக செல்லாது. நாம் மலம் கழித்த பின்னர் கைகளை கழுவும் போது அந்த கழிவுகளில் உள்ள சில பொருட்கள் இந்த கயிற்றிலேயே தங்கிவிடும். அதேபோல நாம் குளிக்கும்போதும் நம் உடலில் இருந்து வெளியேறும் அழுக்குகள் இந்த கயிற்றில் தங்க நிறைய வாய்ப்புள்ளது. இதனால் உடல் சம்மந்தமான நிறைய பிரச்சனைகள் நமக்கு ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது.

saamy kayiru hand

நீங்க என்னதான் மிகப்பெரிய பக்திமானாக இருந்தாலும் இந்த கயிறு காட்டும் விஷயத்தை தவிர்த்து வந்தால் நம் உடலுக்கு நல்லது. இந்த சிம்பு கையில கயிறு கட்டி இருக்காரு, விஜய், அஜித் கையில கயிறு கட்டி இருக்காரு, அதுக்காகத்தான் நான் கட்டுறேன் என்று நீங்கள் சொன்னால் ஒன்னும் பண்ண முடியாது. சீக்கிரம் சங்கு ஊதுவதை யாராலும் தடுக்க முடியாது.

saamy kayiru hand