#Mobile : மொபைலை பற்றி கூறப்படும் புரளிகள்
  • 17:46PM Jun 06,2019 Tamil Nadu
  • Written By துரை முருகன்
  • Written By துரை முருகன்
  • 17:46PM Jun 06,2019 Tamil Nadu

பொதுவாகவே மொபைல் பற்றி சொல்லப்படும் புரளிகள்  பெரும்பாலும் மொபைலின் சிக்னல் மற்றும்  நெட்வொர்க் தொடர்பாகவே இருக்கிறது . மொபைல் பயன்படுத்தும் பலரும் இதனை நம்புவதால், இந்த புரளிகள் அப்படியே காலங்காலமாக பரவி வருகின்றன இந்த பதிவில் மொபைல் பற்றிய புரளிகளும் அதற்கு அறிவியல் ரீதியான விளக்கங்களை பற்றி பார்ப்போம்

mob.jpg

சிக்னல் நன்கு கிடைக்க ஜன்னலோரம் நிற்கனும் இந்த புரளியில் துளியும்  உண்மையும் இல்லை. உங்களது மொபைலுக்கும்  டவருக்கும் இடையே உள்ள பல்வேறு தடைகள் காரணமாகவே, மொபைல் சிக்னல் தடைபட நேரிடுகிறது. ஒரு சிக்னல் எந்தளவுக்கு அதிகமான தடைகளை கடந்து உங்கள் மொபைலை  வந்தடைகிறதோ, அந்தளவுக்கு அது பலவீனமாகிறது.அதனால் ஜன்னல் ஓரமாக நின்று பேசுவதால் எந்த பிரயோஜனமும் இல்லை  நீங்கள் இருக்கும் நான்கு சுவருக்குள் உங்களின் சிக்னல் பிரச்னையை தீர்த்து  துல்லியமான சேவை தரக்கூடிய ஒரு மொபைல் நெட்வொர்க்கை நீங்கள் தேர்வு செய்தால் மட்டுமே இப்பிரச்சனையிலிருந்து விடுபடமுடியும்

mob1.jpg

இரண்டாவது புரளி வோஎல்டிஈ (VOLTE) அழைப்புகள் பேட்டரியை உறிஞ்சிவிடும் என்பது வோஎல்டிஈ (வாய்ஸ் ஓவர் எல்டிஈ) என்பது ஸ்மார்ட்ஃபோன் வாடிக்கையாளர்களுக்கு, ஹெச்டி குவாலிட்டியில் மிகத் துல்லியமான வாய்ஸ் மற்றும் வேகமான கால் அழைப்பு வசதி தரக்கூடியதாகும். வோஎல்டிஈ கிடைக்காத நேரத்தில், உங்களது மொபைலே , தன்னிச்சையாக, 4ஜி அல்லது 3ஜிக்கு மாறி, கால் வசதி செய்ய பயன்படும். வோஎல்டிஈ சேவையை பயன்படுத்தினால், பேட்டரி சேமிக்கப்படும். எனவே, உங்களுக்கு துல்லியமான வாய்ஸ் கால் கிடைக்கவும், பேட்டரி பயன்பாடு சரியாக இருக்கவும் வேண்டுமெனில், இந்த வசதியை(வோஎல்டிஈ ஃபீச்சர் உங்கள் ஃபோனில் இருந்தால்) பயன்படுத்துவதே மிகவும் நல்லது.

mob2.jpg

இது மூன்றாவது புரளி உங்கள் மொபைலில்  ஃபுல் சிக்னல் பார் இருந்தால் நல்ல நெட்வொர்க் கிடைக்கும் என்பதே உண்மையில் சிக்னல் பாருக்கும்சிக்னல் அளவிற்கும் எந்த தொடர்பும் இல்லை. மொபைலில்  5 பார் சிக்னல் காட்டினால், நீங்கள் ஒரு நெட்வொர்க் டவரின் அருகாமையில் உள்ளீர்கள் என்பது மட்டுமே  . நெட்வொர்க் பலத்தை உறுதி செய்வதற்கான அளவுகோல் இது கிடையாது. உண்மை என்னவெனில், ஒரு நெட்வொர்க்கின் பலம் என்பது அது எந்தளவுக்கு வேகமாகச் செயல்படுகிறது என்பதிலும், டேட்டா டிரான்ஸ்ஃபர் அதாவது 4ஜி இன்டர்நெட் ஸ்பீட் எப்படி தருகிறது என்பதிலும்தான் உள்ளது. ஒருசில சிக்னல் பார் உங்கள் மொபைலில் இருந்தாலும், அதன் சேவையில் பாதிப்பு இல்லாமல் இருப்பதே, நெட்வொர்க்கின் பலமாகும்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Share This Story

துரை முருகன்

Top