#RailwayPolice அவசரத்தில் ஏறி, ரயில் சக்கரத்தில் விழப்போன பெண்! உயிரைக்கொடுத்து காப்பாற்றிய காவல் அதிகாரி!
  • 17:18PM Jul 12,2019 Gujarat
  • Written By Kenny seb
  • Written By Kenny seb
  • 17:18PM Jul 12,2019 Gujarat

பொதுவாக ரயிலில் போகும் பயணிகள் பலர் வீம்புக்கென்று ரயில் பெட்டியின் ஓரத்தில் பயணித்து விபத்தில் சிக்கிக்கொள்வார்கள். சில பயணிகள் முன்பே வந்து ஏறாமல் ட்ரெயின் கிளம்பியதும் ஓடிவந்து ஏறுவார்கள். இப்படி ஏறும்போது எதிர்பார்க்காத விதமாக ரயிலின் கீழ் விழவும் செய்வார்கள். தற்போது அதேபோல ஒரு சம்பவம் குஜராத் ரயில் நிலையத்தில் நடந்துள்ளது. நேற்றிரவு அகமதாபாத் ரெயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் பெண் ஒருவர் அவசர அவசரமாக வந்து ரயில் ஏற முயற்சித்துள்ளார். ஆனால் எதிர்பாராநேரத்தில் தடுமாறி ரயில் ப்ளட்போர்ம் இடுக்கில் சிக்கிக்கொண்டார்.

அப்போது அங்கு ரோந்து வந்த ரயில்வே காவல் அதிகாரி ஓடி சென்று அவரைக் காப்பாற்ற முயற்சித்தார். காவலர் சத்தம் போட்டு ஓடிவந்ததும் அக்கம்பக்கத்தில் இருந்த பொதுமக்களும் அந்தப் பெண்ணைக் காப்பாற்ற உதவிக்கு வந்தனர். இவர்கள் அந்தப் பெண்ணை மேலிழுத்தும் அந்தப் பெண் மீண்டும் அந்த இடுக்கில் விழுந்தார். அந்தக் காவல் அதிகாரி எந்தப் பயமும் இன்றி அந்தப் பெண்ணை உயிரை கொடுத்து நடைப்பதைக்கு மீட்டுக் கொண்டு வந்தார். காவல் அதிகாரியின் இந்த மனப்பான்மையைப் பொதுமக்கள் பாராட்டினர்.

Karen Catbird Viral Photo | Loshliya Viral Image | Viral Mouth Purse video

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top