#Television : சின்னத்திரையின் பிதாமகள் ராதிகா !!!
  • 12:11PM Nov 07,2019 Tamil Nadu
  • Written By துரை முருகன்
  • Written By துரை முருகன்
  • 12:11PM Nov 07,2019 Tamil Nadu

ஒரு காலத்தில் வாரம் ஒரு படமும் வெள்ளிக்கிழமை ஒளியும் ஒலியும் மட்டுமே பார்த்துவந்த தலைமுறை மாறி இன்றைக்கு எத்தனையோ டிவி சேனல்கள் இருக்கின்றன. பொழுதை போக்க எத்தனையோ டிவி தொடர்கள் ஒளிபரப்பாகின்றன. இந்த அனைத்து  சீரியல்களின் நோக்கமே இல்லத்தரசிகளின் பேவரைட் சீரியலாக அவர்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டுமென்பதே,ஆனால் பெண்கள் மட்டுமல்ல, ஆண்களையும் டிவி சீரியல் பார்க்க வைத்தவர் ராதிகா சரத்குமார். என்றால் அது மிகையில்லை உண்மையை சொன்னால்  இன்றைய டிவி சீரியல்களுக்கெல்லாம் பிதாமகள்  ராதிகா தான் என்று கூறலாம்.

chithi-serial-part2.jpg

வெள்ளித்திரையில்  கதாநாயகியாக இருந்து பிறகு சின்னத்திரையில்  தடம் பதித்த ராதிகா, தனது பிரைம் டைமை எவ்வாறு ஆட்சி செய்தார் என்று இன்றைய 2K  கிட்ஸ்களுக்கு நிச்சயம் தெரிய வாய்ப்பில்லை.1991ல் பெண்  எனும் டிவி சீரியல் தான்  ராதிகாவின் முதல் சீரியல் இந்த சீரியலை .சுஹாசினி மணிரத்னம் இயக்கியிருந்தார்,  அதன் பிறகு அவர் ஒரு சில சீரியலில் நடித்தாலும் இவருக்கு அதிகமான புகழை  1999 முதல் 2001 வரை சன் டிவியில் வெளியான சித்தி  தொடர், பெற்று தந்தது இது சினிமாவில் அவர் பெற்ற புகழை விட அதிக புகழை அவருக்கு  கொடுத்தது.

rathika.jpg

90 களில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை  வரை இரவு 9.30 மணிக்கு (Prime Time ) ஒளிபரப்பாகும் இவரின்  சீரியலை பார்ப்பதற்கு , ஒவ்வொரு குடும்பமும் டிவியின் முன்பு ஆஜராகிவிடுவார்கள். அப்போதெல்லாம், எல்லோர் வீட்டிலும் டிவி இருக்காது. ஆகையால், டிவி இருப்பவர்கள் வீட்டின் திண்ணை வரை இவரின் சீரியலை பார்ப்பதற்கு குவிந்து விடுவார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.பிறகு அண்ணாமலை, செல்வி, அரசி என்று ஒரு ராஜமதவாக வளம் வந்தவர்  இன்று  கோடீஸ்வரி எனும் கேம் ஷோவை தொகுத்து வழங்கப்போகிறார்.

rathika 2.jpg

திருமதி. ராதிகா சரத்குமார் தொடர்ந்து 21 வருஷம் இரவு 9.30 மணி என்ற  ப்ரைம் டைமில் இதுவரை 6850 எபிசோடுகள், 3430 மணிநேர நடிப்புஎன யாருமே பக்கத்தில் கூட நெருங்க முடியாத சாதனைகளை செய்துள்ளார் என்பது பலருக்கும் தெரியாது,இனிமேல் வேறு ஒருவரால் இந்த சாதனையை முறியடிக்க முடியுமா என்பது தெரியவில்லை, ஆனால் உண்மையில் சீரியலில் பிதா மகள்  ராதிகா சரத்குமார் தவிர்த்து சீரியல்களை பற்றி யாரும் பேச முடியாது.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top