சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரோஜா மிகவும் பிரபலமான தொடராகும். இந்த தொடரின் மிகப்பெரிய வரவேற்புக்கு காரணம் இதில் நாயகியாக நடித்து வரும் நல்கர் பிரியங்கா தான். ஆந்திராவை சேர்ந்தவர் என்றாலும் ரோஜா என்ற பெயரால் தமிழக மக்களின் இல்லம்தோறும் சென்று அவர்களின் குடும்பத்தில் ஒருவராக மாறிவிட்டார்.
சீரியலில் நடிப்பதற்கு முன்பே சில தெலுங்கு படங்களில் நடித்து புகழ்பெற்றவர். தமிழில் ஒரு சில படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சீரியலில் கியூட்டான கதாபாத்திரத்தில் நடித்து கொள்ளை கொண்ட பிரியங்கா எப்போதும் சமூக வலைதளத்தில் தனது புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர்ந்து கொள்ளும் பழக்கம் உடையவர்.
அந்த வகையில் தற்போது ஒரு அசத்தலான நடனம் ஆடும் வீடியோவை பகிர்ந்துள்ளார் பிரியங்கா. சீரியலில் வரும் அதே கெட்டப்பில் சேலையுடன் அவர் ஆடியுள்ள நடனம் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. சீரியலில் தனது நடிப்பு மூலம் பலரும் தமிழக மக்களை மகிழ்வித்து வந்தாலும் எப்போதும் பிரியங்காவுக்கு என்று ஒரு தனி இடம் உள்ளது.