#rodrigo duterte: நானும் ஓரின சேர்க்கையாளர் தான், இப்போது குணமாகி விட்டது?? அவசரப்பட்டு உளறிய அரசியல் பிரபலம் ! எப்படியோ சமாளிச்சுட்டார்!!
  • 10:47AM Jun 06,2019 Chennai
  • Written By AP
  • Written By AP
  • 10:47AM Jun 06,2019 Chennai

சர்ச்சைக்கென்ற பிறந்தவர் பிலிப்பைன்ஸ் அதிபர் rodrigo duterte. கூட்டங்களில் பேசும் போது சர்ச்சையான ஏதோ ஒன்றை இவர் கிளப்பி விடுவதும் அது கண்டனங்களுக்கு ஆளாவதும் வாடிக்கையாகிவிட்டது.அந்த லிஸ்டில் அவர் கிளப்பிய அடுத்த சர்ச்சை இதோ, சமீபத்தில் அரசு முறை பயணமாக ஜப்பான் சென்ற இவர், அங்குள்ள பிலிப்பைன்ஸ் மக்களை சந்தித்து ஒரு ஸ்பீச் கொடுத்துள்ளார்.

அப்போது பிலிப்பைன் நாட்டின் பிரதான எதிர்க்கட்சியை சார்ந்த பார்லிமென்ட் உறுப்பினரான அண்டோனியோ டிரில்லேன்ஸ் குறித்து அதிபர் பேசியது ,அண்டோனியோ ஓரின சேர்க்கையாளர் என்றும் இதற்கு முன்னர் நானும் ஓரின சேர்க்கையாளர் தான் , இதில் நல்ல விஷயம் என்னவென்றால் என்னை நான் குணப்படுத்திக்கொண்டேன்.இப்போது ஓரின சேர்க்கையாளர் இல்லை என தெளிவு படுத்தி கொண்டார்.

பிலிப்பைன்ஸ் அதிபர் rodrigo duterte எதிர்க்கட்சியை சேர்ந்தவரை விமர்சிக்கும் விதமாக பேசி,இவரே பெரும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார்.ஓரின சேர்க்கை என்பது நோய் எனும் வகையில் தன்னை குணப்படுத்தி கொண்டதாக கூறியது பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. ஓரின சேர்க்கையாளர்கள் இவரது இந்த கருத்திற்கு தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்

Top