#widow: இறந்த சடலத்தை கழுவிய நீரை குடிக்க சொல்லும் சடங்கு! இன்னும் எத்தனை விதமான கொடுமை!
  • 23:23PM Oct 12,2019 Chennai
  • Written By AP
  • Written By AP
  • 23:23PM Oct 12,2019 Chennai

கணவனை இழந்த ஒரு பெண் சமூகத்தில் கண்ணுக்குத் தெரியாத கதாப்பாத்திரமாக வாழ்ந்தும்  இறந்தும் விடுகிறார்.சதி எனும் உடன் கட்டை ஏறும் வழக்கத்தை கேள்விப்பட்டிருப்போம். கணவரை எரிக்கும் அதே சிதையில் மனைவியும் விழுந்து உயிர் தியாகம் செய்ய வேண்டும். ஆரம்பத்தில் கணவன் மீது தீராத காதல் கொண்ட பெண்கள் கணவன் இழப்பை தாங்க முடியாமல் நெருப்பில் விழுந்தனர்.பின்னர் கணவன் போரில் இறந்துவிட்டால் நாட்டை கைப்பற்றிய எதிரி நாட்டு அரசரிடம் அடிமையாக இருப்பதை காட்டிலும் இறந்துவிடுவதே மேல் என எண்ணிய பெண்கள் அனைவரும் நெருப்பு மூட்டி கூட்டமாக உயிரிழந்தனர். நாளடைவில் அப்பெண்ணிற்கு விருப்பம் இல்லாவிட்டாலும் அல்லது அந்த பெண் வாழ ஆசைப்பட்டாலும் கூட  உறவினர்கள் சேர்ந்து  உடன்கட்டை ஏற கட்டாயப்படுத்தி இந்த முறையை பின்பற்றி வந்தனர். முன்வேத காலத்தில்,சிந்து நாகரீகத்தில் இது போன்ற வழக்கம் கிடையாது எல்லாமே இடையே யாரோ திணித்தவை..  

இன்னும் சில இடங்களில் வித்தியாசமாக கணவனை இழந்த பெண்கள் மொட்டை அடிக்கப்பட்டு மூலையில் இருக்குமாறு செய்தனர். வேறு சில இடங்களில் தனது இறந்த கணவனின் உடலை கழுவிய நீரை குடிக்க சொல்லி சடங்கு என்னும் பெயரில் பெண்களை கொடுமை படுத்தியுள்ளனர். 

விதவை பெண்கள் எந்த வித சுபக்காரியங்களிலும் வருகை தர கூடாது வந்தாலும் அதை யாரும் விரும்ப மாட்டார்கள்.  அப்படி மீறி பங்கேற்க நினைத்தால் அபசகுனம் என கூறி அவர்களை மூலைக்கு தள்ள நினைதத்து இந்த சமூகம். இன்றும் சுப காரியங்களுக்கு போகும் முன் வெளியே சென்று சகுனம் பார்ப்பார்கள் விதவை பெண் வந்தால் சிறிது நேரத்திற்கு பின்னே செல்வார்கள். சாதாரண பூ,பட்டு, ஆபரணங்கள் அணிய முடியாமல் ஆசைகளை துறந்த பெண்கள், எப்போதாவது பூவோ பொட்டோ வைத்தால் குற்றவாளியாக பார்த்த இதே சமூகத்தில் தான் பெண்கள் சமூகத்தின் பிடியைத் தகர்த்தெறிந்து தைரியமான உலா வருகின்றனர்.  

முற்போக்குவாதிகள் ஏற்றுக்கொண்டாலும் இன்றைய நிலவரத்தில் எல்லா இடங்களிலும் அவர்களைக் காண இயலாது. காலம் காலமாக அவர்கள் மீது திணிக்கப்பட்டதன் விளைவு அவர்களாகவே ஒதுங்கி வழிவிட்டு விலகிச் சென்று விடுகின்றனர். நாமும் நமது வாழ்வில் இவர்களை கடந்து வந்திருப்போம்,ஏன் இவர்களுக்கு இந்த நிலை சாபக்கேடா? கிராமங்களில் இன்னும் இந்த நிலை மாறாமல் தேங்கிக்கிடக்கிறது. ஏதாவது ஒரு பெண் இவற்றை எல்லாம் தூக்கிபோட்டுவிட்டு சாதாரண பெண்ணாக வாழ நினைத்தால் ஏசும் கூட்டத்திற்கு மத்தியில் காணமல் போகும் முற்போக்கு சிந்தனை.   

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top