#Rithvika : ரித்விகாவை கலாய்க்கும் நெட்டிசன்கள் !!!
  • 10:14AM Oct 15,2019 Tamil Nadu
  • Written By துரை முருகன்
  • Written By துரை முருகன்
  • 10:14AM Oct 15,2019 Tamil Nadu

ரித்விகா இயக்குனர் பாலாவின் பரதேசி படத்தில் அறிமுகமானாலும் இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில்  நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான மெட்ராஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை ரித்விகா. பிறகு  ரஜினி நடிப்பில் வெளியான கபாலி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு விஜய் டிவி அவரை பிக்பாஸ் சீசன் 2 வில் கலந்து கொள்ள அவருக்கு அழைப்பு விடுத்தனர். அதிலும் அவர் கலந்து கொண்டார்.

rithvika 1.png

ரித்விகா பிக்பாஸ் நிகழ்ச்சியில் அமைதியாக இருப்பதை பார்த்து ஒரு வாரத்தில் வெளியாகி போய் விடுவார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இறுதி வரை இருந்து  பிக்பாஸ் பட்டத்தை வென்றார். அதன் மூலம் இன்னும் பிரபலமானார்.பிக்பாஸ் வீட்டை வெளியேறிய ரித்விகாவுக்கு அதிக படவாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.

இந்த  சூழ்நிலையில் எப்போது சமூக வலைத்தளத்தில்ஆக்ட்டிவாக  இருக்கும் ரித்விகா. தற்போது புடவையில் வித்தியாசமான போஸ் கொடுத்து  ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் இதனை பார்த்த நெட்டிசன்கள் ரித்விகாவை கலாய்த்து வருகிறார்கள்

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top