Highrise

அமெரிக்காவில் கொரோனா காலத்தில் கூட விற்பனையில் சாதனை படைத்த உணவகம் எது தெரியுமா?

Sep 20 2021 01:16:00 PM

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் என்னுடைய நண்பன் வேலை பார்த்து வருகிறான். ஊரடங்கு நேரத்தில் அவனால் தாயகம் திரும்ப முடியவில்லை. பரவல் அதிகம் இருந்த நாட்களில் அமெரிக்காவில் தான் அவன் இருந்தான். இந்த வருடம் தான் அவனால் நம் நாட்டுக்கு வர முடிந்தது. வீட்டுக்கு திரும்பிய அவன் கொரோனாவின் ஆரம்ப நாட்களில் அமெரிக்காவில் நடந்த துயரங்களை வீட்டிலுள்ள அவன் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் என்னைப்போன்ற நட்பு வட்டாரத்தில் ஒரு சிலரிடமும் கூறியிருந்தான்.

ring-side-steak-house portland-oregon

கொரோனா பிரச்சனையிலும் கூட சாப்பாட்டுக்காக நான் கஷ்டப்படவில்லை என்று அவன் பெருமையாக கூறினான். கொரோனா காலத்தில் அவனுக்கு கைகொடுத்த முக்கியமான உணவகங்களில் ஒன்று தான் ரிங்சைட் ஸ்டீக்ஹவுஸ். அந்த உணவகத்தை பற்றிய ஒரு சில தகவல்களை அவன் என்னிடம் கூறும்போது எனக்கும் அந்த உணவகத்தின் மீது ஒரு மரியாதை ஏற்பட்டது.

ring-side-steak-house portland-oregon

ரிங்சைட் ஸ்டீக்ஹவுஸ் என்பது அமெரிக்காவிலுள்ள போர்ட்லேண்டில் அமைந்துள்ள ஒரு உணவகம் ஆகும். RingSide 60 ஆண்டுகளுக்கும் மேலாக நகரத்தின் புகழ்பெற்ற ஸ்டீக்ஹவுஸ்களில் ஒன்றாக உள்ளது. இந்த உணவகத்தின் பெயர் குத்துச்சண்டை என்ற கருப்பொருளைக் குறிக்கிறது.

ring-side-steak-house portland-oregon

2010 ஆம் ஆண்டில், இந்த உணவகம் தற்காலிகமாக அதன் இருப்பிடத்தை ஃபாக்ஸ் கோபுரத்திற்கு அருகே நகர்த்தியது. ஒரு வருடம் கழித்து, அவர்கள் ஃபாக்ஸ் டவர் இடத்தில் ரிங் சைட் மீன் உணவகத்தை திறந்தனர். ரிங் சைட் உணவகம் 40 க்கும் மேற்பட்ட பிராந்திய மற்றும் தேசிய விருதுகளைப் பெற்றுள்ளது. அதில் ஜேம்ஸ் பியர்ட் விருதும் அடங்கும்.

ring-side-steak-house portland-oregon

ஏப்ரல் 2020 இன் பிற்பகுதியில், கோவிட் -19 தொற்றுநோயின் போது ரிங் சைட் அதன் 75 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக உறைந்த ஸ்டீக் பெட்டிகளை நேரடியாக பொதுமக்களுக்கு விற்றது. கொரோனா காலத்தில் உலகின் பல நாடுகளிலும் ஏகப்பட்ட கடுமையான விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டது.

ring-side-steak-house portland-oregon

கொரோனாவால் அதிகம் பாதிப்பை சந்தித்த அமெரிக்காவிலும் சில கடுமையான விதிகள் அமலில் இருந்தது. உணவகத்தில் அமர்ந்து சாப்பிட முடியாது என்பதால் பெரும்பாலும் அனைத்து உணவகங்களும் பார்சல் சேவைகளை தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்கின. அந்த வகையில் ரிங்க்சைட் உணவகமும் உறைந்த பெட்டிகளில் உணவை அடைத்து விற்பனை செய்தது. இந்த நடவடிக்கை மேற்கு பர்ன்சைட் தெருவில் ஒரு மைல் நீண்ட போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியது. மேலும் 2.5 மணி நேரத்திற்குள் பொருட்கள் அனைத்தும் விற்று தீர்ந்தது.

ring-side-steak-house portland-oregon

75 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க இந்த உணவகத்தில் தயாரிக்கப்படும் இறைச்சி அற்புதமான சுவையை கொண்டிருக்குமாம். மேலும் இங்கு தரப்படும் வெங்காய வறுவலும் மக்களிடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. ஆபத்து காலத்தில் உதவியதால் இந்த உணவகத்துக்கு அவன் இலவசமாக நிறைய விளம்பரம் செய்து வருகிறான். அமெரிக்காவுக்கு சென்று பார்த்தால் தான் அந்த பயபுள்ள வர்ணிக்கிறத பத்தி தெரிஞ்சிக்க முடியும்.