#Rice porridge : எங்க போச்சு இந்த 'கஞ்சி' தண்ணி? குக்கர் வந்து நாம் இழந்த மலைக்க வைக்கும் எனர்ஜி!
  • 14:50PM May 03,2019 Tamil Nadu
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 14:50PM May 03,2019 Tamil Nadu

விறகு அடுப்பில் அரிசி சாதம் செய்து, கரி பூசிய பாத்திரத்தில் நைய குழைய விட்டு, அப்படியே எடுத்து வடித்தால், கமகமவென வாசத்துடன் கஞ்சி தயாராக இருக்கும். அதில் ரெண்டு உப்பு கல்லு போட்டு குடித்தால், உடல் வலி எல்லாம் எங்க போகும் என்றே தெரியாது. இன்றைக்கு தான் உஷ்ணு..! சத்தம் வந்தாலே பாம்பு கொத்தியது போல பதறியடித்து சென்று அடுப்பை அணைக்கிறோம். வடிச்ச கஞ்சி குடிச்ச வாய் எல்லாம், குக்கர் வந்ததில் இருந்து நாக்கு செத்து போய் கிடக்குது. அன்னைக்கு எல்லாம் காய்ச்சல் வந்தாலே போதும், முதல்ல போய் கஞ்சி காச்சி குடின்னு தான் சொல்லுவாங்க. இன்னைக்கு குக்கரில் வெந்த சாதத்தை மிக்சியில் அரைத்து இது தான் கஞ்சி என்று சொல்லி கொடுக்கறாங்க.

உண்மையிலேயே சாதம் வடிச்ச காஞ்சியில இருக்க சத்து வேற எதுக்கும் வராது. ஒரு டம்ளர் அரிசிக்கு, 10 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட்டு வடிகட்டி சூடாக சிறிது நெய் கலந்து, 2-3 டம்ளர் அளவில் குடிப்பதால், வாதத்தை இயற்கை நிலைக்குக் கொண்டு வராலாம், நாவறட்சி, உடல் வாட்டம், எளிதில் ஜீர்ணமாகுதல், தாதுக்களை சமமாக்குதல், தசை நார்களை மிருதுவாக்குதல், வியர்வையையுண்டாக்குதல் போன்றவை எல்லாம் எல்லாம் சரியாக நடக்கும்.

ஒரு டம்ளர் புழுங்கலரிசியில் 6 டம்ளர் தண்ணீர் விட்டு நன்கு அரிசி வேகும் வரை கொதிக்க விட்டு வடிகட்டி சூடாக சிறிது நெய் கலந்து குடிப்பதால் பசி, தாகம், உடல் வாட்டம், உடல் இளைப்பு, வயிற்று நோய், ஜ்வரம் இவற்றை நீக்கும். மலத்தை எளிதில் வெளிப்படுத்தும், பத்தியமானது, பசியை நன்கு தூண்டும். எளிதில் ஜீர்ணமாகிவிடும். மாதவிடை சமயத்தில் உருவாகும் தசைஅயர்வு உறுப்புகள் அதிக வேலைபாடு ,ரத்த இழப்பினால் ஏற்படும் இயற்கை உபாதைகளினால் உருவாகும் களைப்பு இவற்றிக்கு சரிசெய்யும் விதத்தில் சக்தி தரும் இந்த கஞ்சி. அதே போல சூடாக வடித்த சோற்று கட்சியில் உப்பு சீரகத்தூள் சிறுவெங்காயம் கடித்துப் பருக இடுப்புவலி ஓடியே போகும்.

1:8 என்ற விகிதத்தில் அரிசியும் தண்ணீரையும் கொதிக்கவிட்டு, தண்ணீருடன் அரிசியை குழைத்து கூழாக்கிக் குடித்தால், மலத்தைக்கட்டும், மனதுக்குகந்தது, நாவறட்சியை போக்கும், பசியைத் தூண்டும், நன்மை பயப்பது, புண்கள், கண்நோய், உடல் இளைப்பு ஆகியவற்றை குணப்படுத்தும். குக்கரா இல்லை குக்கர் இல்லாத முறையா கேஸ் அடுப்பா இல்லை விறகு அடுப்பா என்று அனுகுமுறை கைக்கொள்வதைவிட அரிசியில் என்ன வித சத்து இருக்கிறது. அந்த சத்தம்சத்தை எந்தவிகதத்தில் நாம் உட்கொள்ளவேண்டும். உட்கொள்ளும் முறையில் என்ன நன்மைகள் உண்டு நன்மைகள் இல்லை என்று நாம் அனுபவ அறிவாற்றல் அனுகுமுறை தேவை. Awesome History of Spicy Biryani (ஊண் சோறு)

Share This Story

முருகானந்தம்

Top