Misc

இவருக்கு அடித்த ராஜயோகம் வேறு எவருக்காவது கிட்டுமா ? விமர்சனங்களை துவம்சம் செய்து தடைகளை தவிடுபொடியாக்கி களமிறங்க வரும் கேப்டன்

Apr 05 2021 10:19:00 PM

டோனிக்கு பிறகு இந்திய அணிக்கு நிரந்தரமான விக்கெட் கீப்பராக யாரை தேர்வு செய்வது என்று குழப்பத்தில் இருந்த இந்திய அணிக்கு இனிமேல் அந்த பிரச்சனையில்லை. அதற்கு காரணம் ரிஷாப் பண்ட். அவருடைய எழுச்சி எல்லா சந்தேகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டது.

rishab-pant-captain

சிறிது காலம் தினேஷ் கார்த்திக், சில மேட்சுகளில் ராகுல், டெஸ்ட் போட்டிகளில் சகா என்று ஏகப்பட்ட கீப்பர்கள் விளையாடி வந்தனர். ஐபிஎல் போட்டிகளின் மூலம் அணியில் இடம்பிடித்தும் நீண்ட நாட்களாக சிறப்பாக விளையாடாத காரணத்தால் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானார் பண்ட். இதனிடையே சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து தொடரில் சிறப்பாக விளையாடி கோப்பை வெல்ல உறுதுணையாக நின்றதுதான் தற்போது அவரை ஒரு படி மேலே உயர்த்தியுள்ளது. பயப்படாமல் பந்துகளை விரட்டும் அவருடைய ஸ்டைல் அனைவரையும் கவர்ந்துள்ளது.

rishab-pant-captain

பல்வேறு சாதனைகளை படைத்து தற்போது இந்திய அணியின் அடுத்த விக்கெட் கீப்பராக அனைத்து விதமான போட்டிகளிலும் ஜொலித்து வருகிறார் ரிஷாப் பண்ட். இப்போது அடுத்த மைல்கல்லாக இந்தாண்டு நடக்கவுள்ள ஐபிஎல் போட்டிகளில் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு கேப்டன் ஆக நியமிக்கப்பட்டுள்ளார். டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் காயம் காரணமாக இங்கிலாந்து தொடரில் இருந்து வெளியேறினார். காயம் இன்னும் குணமாகாததால் அவர் ஐபிஎல் போட்டியில் விளையாடுவது கேள்விக்குறியானது. அடுத்து யாரை கேப்டனாக்குவது என்று யோசித்த அணி நிர்வாகம் இளம் நாயகன் ரிஷாப் பண்ட் கேப்டனாக செயல்படுவார் என்று அறிவித்துள்ளது. புதிய கேப்டன் பண்ட் அவருடைய ஸ்டைலில் எப்படி டெல்லி அணியை வழிநடத்தி செல்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.