#RESERVEBANK: BANK ACCOUNT வைத்திருக்கிறீர்களா??? உங்களுக்கெல்லாம் RESERVE BANK-ன் எச்சரிக்கை!!!
  • 14:26PM Oct 13,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 14:26PM Oct 13,2019 Chennai

நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம், நாம் BANK-ல் புதிய ACCOUNT ஒன்றைத் துவங்கும் போதே, PROOF-கள் அனைத்தையும் கொடுத்து, KYC எனப்படும் KNOW YOUR CUSTOMER FORM-ஐ FILL-UP செய்த பிறகுதான் ACCOUNT OPEN செய்யப்படும் என்பது. தற்போது அதை மறுபடியும் UPDATE செய்ய வேண்டும் எனவும், தவறினால் JANUARY 1, 2020-ல் அந்த BANK ACCOUNT முடக்கப்படும் என்று RESERVE BANK எச்சரித்துள்ளது. அப்படி முடக்கப்பட்டால், அதற்குப் பிறகு அந்த வங்கிக் கணக்கில் இருந்து நேரடியாகவோ, ONLINE மூலமாகவோ எந்த TRANSACTION-ம் செய்ய முடியாது எனவும் எச்சரித்துள்ளது. ACCOUT HOLDER-ன் IDENTITY PROOF, ADDRESS PROOF, MOBILE NUMBER, E-MAIL, PHOTO உள்ளிட்ட DOCUMENT-களை, BANK-ல் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்திரவிடப்பட்டுள்ளது.

காரணம் கேட்டால், TRANSACTION மோசடிகளைத் தவிர்க்கவும், BANK ACCOUNT மூலம், TERRORIST ORGANISATION-களுக்கு CASH TRANSFER செய்யப்படுவதைத் தவிர்க்கவும், ACCOUNT HOLDER-களின் பாதுகாப்பு கருதியும், இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது என்று சொல்கிறது RESERVE BANK. ACCOUNT HOLDER-களின் TRANSACTION மற்றும் இதரத் தன்மைகளின் அடிப்படையில், KYC UPDATE செய்வதற்கான கால அளவு மூன்று விதமாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இரண்டு ஆண்டுகள், எட்டு ஆண்டுகள் மற்றும் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை, இந்த KYC FORM, UPDATE செய்யப்பட வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு, கணக்கு வைத்துள்ள வங்கிக்குச் சென்று, அங்கு தரப்படும் KYC FORM-ஐ FILL-UP செய்து, கேட்கப்படும் DOCUMENT-களைக் கொடுக்க வேண்டும். மாற்றம் இல்லையென்றால், வங்கியின் WEBSITE-ல், “NO CHANGE IN KYC” என்ற இணைப்பை CLICK 'செய்வதன் மூலம், UPDATION பணியைச் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதெல்லாம் சரிதான். ஒருபக்கம் என்னவென்றால், நிதியமைச்சர் BANK MERGER பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார். மற்றொரு பக்கம் ECONOMIC CRISIS பிரச்சினை பூதாகரமாக வெளிவந்து கொள்ணடிருக்கிறது. அதே வேளையில், RESERVE BANK ஒப்புதலோடு, பெரிய கடன்கள் வேறு WRITE-OFF செய்யப்பட்டு வருகிறது. இதனால், இன்னும் எத்தனை வங்கிகள் இழுத்து மூடும் நிலைக்கு வருமென்று தெரியவில்லை. இந்நேரத்தில், அவற்றைக் கவனத்தில் கொள்ளாமல், RESERVE BANK இதைப் பற்றி ஏன் பேசிக் கொண்டிருக்கிறது என்ற கேள்வியும் எழாமல் இல்லை. எதற்கெடுத்தாலும் தீவிரவாதிகளுக்கு நிதி செல்வதைத் தடுக்க என்றால், தீவிரவாதிகள் BANK ACCOUNT மூலமாகத்தான் TRANSACTION செய்து கொண்டிருக்கிறார்கள் என்று RESERVE BANK ஒப்புக் கொள்கிறதா??? வேலை தேடி ஊர் விட்டு ஊர் வந்து போராடிக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு, காசிருக்கிறதோ இல்லையோ, அவசரத்திற்கு கடன் வாங்கவாவது ஒரு BANK ACCOUNT இருக்கிறது. அது கூட RESERVE BANK-க்குப் பொறுக்கவில்லை என்றால் என்ன செய்வது???

RBI Versus Supreme Court  |  Online Transaction Frauds  |  Farmers Loan Waiver  |  Urjit Patel Resigns  |  RBI Versus Section 7  |

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top