#BANKCLOSURE: தொடர்ச்சியாக மூடப்படும் வங்கிக் கிளைகள்!!! RTI-யில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்!!!
  • 13:12PM Nov 05,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 13:12PM Nov 05,2019 Chennai

DEMONETISATION சமயத்தில், புது நோட்டுக்களை மாற்றுவதற்குக் குளறுபடி ஏற்பட்ட போது உடனடியாக, DIGITAL INDIA-வுக்கான முதல்படி என்று சொல்லிச் சமாளித்தது மத்திய அரசு. ஆனாலும், அப்போது நமது நாட்டின் CYBER SECURITY நிலையைக் கருத்தில் கொண்டும், NON INFORMAL SECTOR தொழில்கள் இயங்கும் தன்மையைக் கொண்டும், DIGITAL INDIA இப்போதைக்குச் சாத்தியமில்லை என்று வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்தனர். படித்தவர்கள், படிக்காதவர்கள் பாகுபாடின்றி இன்னும் பாதிக்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு, BANK CHALLAN FILL செய்வதே ஒரு பாடுதான். வலுக்கட்டாயமாக BANK-ஐ நோக்கிப் பொதுமக்களைத் தள்ளும் நடவடிக்கையை மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

NON INFORMAL SECTOR தொழில்கள் BANK-ஐ நம்பி நடப்பதில்லை. அதே போல IMPORT EXPORT போன்றவையும் சரிவைச் சந்தித்துள்ளன. இது போதாதென்று மத்திய அரசு BANK MERGER-கள் மூலம் BANK-களின் எண்ணிக்கையையும் குறைக்க முயற்சி எடுத்து வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் RTI கேள்வி ஒன்றுக்குப் பதில் அளித்த RESERRVE BANK அளித்த பதிலில் வேறொரு அதிர்ச்சிகரமான உண்மையும் வெளி வந்துள்ளது. BANK OFFICER-கள், EMPLOYEE-கள் UNION-களின் எதிர்ப்பையும் மீறி PUBLIC SECTOR BANKS எனப்படும் பொதுத்துறை வங்கிகள் பல ஒன்றிணைக்கப்பட்டு வருகின்றன. BANK MERGER-ல் மூடப்பட்ட BRANCH-கள் தொடர்பான விவரங்கள் RIGHT TOWARDS INFORMATION – RTI சட்டத்தின்படி சமீபத்தில் கோரப்பட்டன. அப்போதுதான், கடந்த 5 ஆண்டுகளில் 3,400 வங்கி கிளைகள் மூடப்பட்டுள்ளன என்ற அதிர்ச்சித் தகவல் வெளிவந்திருக்கிறது.

RTI கேள்விக்கு RESERVE BANK பதிலில், “கடந்த 5 ஆண்டில் 26 PUBLIC SECTOR BANK-களுக்குச் சொந்தமான 3,400 BRANCH-கள் மூடப்பட்டுள்ளன அல்லது பெரிய BANK-டன் இணைக்கப்பட்டுள்ளன. 2017-18 FINANCIAL YEAR-ல் 2,083 BRANCH-கள் மூடப்பட்டுள்ளன. இதற்கு முன்பு 2014-15-ல் - 90, 2015-16-ல் - 126, 2016-17-ல் - 253 BRANCH-கள் மூடப்பட்டுள்ளன. கடந்த 2018-19-ல் 875 BRANCH-கள் மூடப்பட்டுள்ளன. இதில் அதிகபட்சமாக 2,568 STATE BANK OF INDIA BRANCH-கள் மூடப்பட்டுள்ளன” எனத் தெரிவித்துள்ளது. APRIL 1-ம் தேதி முதல் STATE BANK OF INDIA-வுடன் அதன் SUB BANK-கள் மற்றும் MAHILA BANK-கள் இணைக்கப்பட்டன. என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, முதலில் STATE BANK OF INDIA-வுடன் இணைப்பது போல இணைத்துவிட்டுப் பின்னர், அதை வைத்தே அந்த BRANCH-களை மூடிவிடுகிறார்கள். UNION பிரச்சினையும் வராது. சரி, ஒரே கேள்வி. உண்மையாகவே நல்லதற்காகச் செய்வதானால், எதற்கு இந்தத் திருட்டுத்தனம்???

IBPS Recruitment  |  PMMY Finance  |  UPI Digital Payment  |  Online TRansaction Frauds  |  Reserve Bank Governor  |

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top