பேருந்துகளின் வழித்தட மாற்றம்…
  • 07:33AM Oct 16,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 07:33AM Oct 16,2017 Chennai, Tamil Nadu 600003, India

ஊருக்குப் போலாம்னு கிளம்பிட்டு, எந்த பஸ் எங்கயிருந்து கிளம்புதுன்னு தெரியாம குழம்பிட்டிருக்கீங்களா??? 15, 16, 17, இந்த மூணு நாளும் பஸ்களின் வழித்தட மாற்றம் உங்களுக்காக… படிச்சுட்டு ஷேர் பண்ணுங்க, ஏன்னா உங்க ஃப்ரெண்ட்ஸ் யாராச்சும் வழியில மாட்டியிருக்கலாம் இல்ல???

அண்ணா நகர் (மேற்கு):

செங்குன்றம் வழியாக ஆந்திர மாநிலத்துக்குச் செல்லும் அனைத்துப் பேருந்துகளும் அண்ணாநகர் மேற்கில் உள்ள மாநகர பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.

சைதாப்பேட்டை சின்னமலை:

கிழக்கு கடற்கரை சாலை (ஈசிஆர்) வழியாகப் புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் வரை செல்லும் பேருந்துகள் சைதாப்பேட்டை மாநகர போக்குவரத்துக் பணிமனை (சின்னமலை) எதிரில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் இருந்து இயக்கப்படும்.

தாம்பரம் சானடோரியம்:

விக்கிரவாண்டி மற்றும் பண்ருட்டி வழியாகச் செல்லும் பேருந்துகள் திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாகக் கும்பகோணம், தஞ்சாவூர் மார்க்கமாகச் செல்லும் அனைத்துப் பேருந்துகளும் தாம்பரம் சானடோரியம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.

பூவிருந்தவல்லி:

ஆற்காடு, ஆரணி, வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் ஓசூர் போன்ற ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகள் அனைத்தும் பூவிருந்தவல்லி பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.

 

கோயம்பேடு:

வெளியூர்களுக்குச் செல்லும் பேருந்துகள் வழக்கம் போல் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும். குறிப்பாக, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, திருவனந்தபுரம், விழுப்புரம், பண்ருட்டி, நெய்வேலி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சேலம், கோயம்புத்தூர், எர்ணாகுளம் மற்றும் பெங்களூருக்கு செல்லும் பேருந்துகள் இங்கிருந்து புறப்படும்

 

வழித்தட மாற்றங்கள்

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து அனைத்து இருக்கைகள் பூர்த்தியான பேருந்துகள் தாம்பரம் பெருங்களத்தூர் செல்லாமல் மதுரவாயல், பூவிருந்தவல்லி, நசரத்பேட்டை, வெளிச்சுற்றுச் சாலை வழியாக வண்டலூர் செல்லும். தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் பேருந்து நிலையங்களில் இருந்து பயணம் மேற்கொள்ளும் வகையில் முன்பதிவு செய்திருக்கும் பயணிகளை ஊரப்பாக்கம் தற்காலிகப் பேருந்து நிறுத்தம் சென்றடைந்து, அங்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு பேருந்துகள் செல்லும். மேற்கண்ட தற்காலிக பேருந்து நிலையங்களுக்கும் இணைப்பு பேருந்துகள் மாநகர போக்குவரத்துக் கழகத்தின் மூலம் இயக்கப்படும்.

 

கார் மற்றும் இதர வாகனங்கள்

வரும் 15-ம் தேதி முதல் 17-ம் தேதி வரையில் கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர் தாம்பரம், பெருங்களத்தூர் வழியாகச் செல்வதை தவிர்த்து, திருக்கழுக்குன்றம் - செங்கல்பட்டு அல்லது ஸ்ரீபெரும்புதூர் - செங்கல்பட்டு வழியாகச் சென்றால், போக்குவரத்து நெரிசல் இன்றி பயணம் செய்யலாம்.

தீபாவளி பண்டிகை முடிந்து பொதுமக்கள் திரும்பும் வகையில் முக்கிய பகுதிகளிலிருந்து வரும் 19-ம் தேதி முதல் 22-ம் தேதி வரையில் 7,043 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். பண்டிகை நெருங்கிள்ள நிலையில், அரசுப் பேருந்துகளை சீரமைக்கும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளது.

300 கிமீ தூரத்துக்கு மேல் செல்லும் சிறப்புப் பேருந்துகளில் பயணிக்க விரும்புவோர் www.tnstc.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும், முன்பதிவு மையங்களில் டிக்கெட் முன்பதிவு செய்ய சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 26, தாம்பரம் சானடோரியத்தில் 2, பூவிருந்தவல்லி பேருந்து நிலையத்தில் 1 என மொத்தம் 29 சிறப்பு முன்பதிவு மையங்கள் வரும் 13-ம் தேதி முதல் செயல்படும்.

பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் மற்றும் இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கும் 044-24794709 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

இந்தத் தகவல்களை வெளியிட்டிருக்கிறவங்க நம்ம அரசுப் பேருந்து தொழிலாளர்கள் சங்கமம், இணையும் கைகள். எனவே, கவலைப்படாம தீபாவளிக்கு ஊருக்கு போய்ட்டு சந்தோஷமா கொண்டாடுங்க… அப்படியே மக்களுக்கு முன்கூட்டியே தகவலைத் தெரிவிச்சதுக்கு ஒரு நன்றியும் தெரிவிச்சுக்கலாம்.

நன்றி: "இணையும் கைகள்", அரசு பேருந்து தொழிலாளர்கள் சங்கமம்.

 

 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top