#Car : ரெனோ டிரைபர் எஸ்.யு.வி சந்தையில் மாற்றத்தை ஏற்படுத்துமா ?
  • 11:37AM Oct 09,2019 India
  • Written By துரை முருகன்
  • Written By துரை முருகன்
  • 11:37AM Oct 09,2019 India

பிரான்ஸ் நாட்டை தலைமை இடமாக கொண்ட  ரெனால்ட் நிறுவனம் தற்போது டிரைபர் இந்திய கார் சந்தையில்  என்ற பெயரிலான எஸ்.யு.வி. மாடலை அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த வாகனத்துக்கான முன்பதிவு ஆகஸ்டு 17 ம் தேதி தொடங்கப்பட்டது புதிய ரெனோ  டிரைபர் எஸ்.யு.வி 4 மீட்டருக்கும் குறைவான பிரிவில் உருவாகி உள்ளது .

renault_triber_right_600x300.jpg

மேலும் இந்த காரின் நீளம் 3,990 மி.மீ., அகலம் 1,637 மி.மீ, உயரம் 2,656 மி.மீ. ஆகும். இதன் சக்கரங்களின் ஆரம் 182 மி.மீ. ஆகும். இந்த மாடல் காரில் 84 லிட்டர் கொள்ளளவில் பொருட்களை வைக்கும் இட வசதி கொடுக்கப்பட்டுள்ளது . குறிப்பாக , மூன்றாவது வரிசை இருக்கையை மடக்குவதன் மூலம் இட வசதி 625 லிட்டராக அதிகரிக்கும்.

renault_triber 1.jpg

இந்த காரில்  பகலில் ஒளிரும் டி.ஆர்.எல்.(DAY TIME RUNNING LIGHT ) விளக்கு, ரூப் பார், புரெஜெக்டர் ஹெட்லேம்ப், 15 இன்ச் அலாய் சக்கரங்கள், கழுகின் அலகு போன்ற பின்புற விளக்கு, ஸ்கிட் பிளேட் ஆகிய அம்சங்களுடன் அறிமுகமாக உள்ளது . மேலும் , காரின் உள்புறம் 8 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்ற வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளது

renault_triber 2.jpg.

மேலும் இந்த காரில் குறிப்பிட்டு சொல்ல கூடிய முக்கியமான சிறப்பம்சம்  இரண்டாவது வரிசையில் உள்ளவர்களுக்கென ஏ.சி. வசதியும் , மூன்றாவது வரிசையில் உள்ளவர்களுக்காக மேற்கூரையில் ஏ.சி. வசதியும்  என குளிர்ச்சியான பயண அனுபவத்தை தரும் வகையில் டிரைபர் எஸ்.யு.வி. உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு பட்டன்  மூலம் ஆன்-ஆப் வசதி, பாதுகாப்புக்கு 4 ஏர் பேக்குகள் என அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த  டிரைபர் அறிமுகம் செய்வதின் மூலம் தனது விற்பனை சந்தையை இரட்டிப்பாக உயர்த்திக் கொள்ள  ரெனோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top