#keeladi: தமிழே உலகின் உச்சமானது: இந்திய வரலாறு மாற்றி எழுதப்படுகிறது - கீழடி தொடர்பில் வெளியான மாபெரும் அறிவிப்பு.!
  • 19:32PM Sep 19,2019 Keeladi
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 19:32PM Sep 19,2019 Keeladi

கீழடி தொல்பொருட்கள் தொடர்பாக தமிழ்நாடு தொல்லியல் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. கீழடியில் 2018ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட நான்காம் கட்ட அகழ்வாய்வின் போது சேகரிக்கப்பட்ட ஆறு கரிம மாதிரிகள் அமெரிக்க நாட்டின் வட மாகாணம் மியாமி நகரில் அமைந்துள்ள பீட்டா பகுப்பாய்வு சோதனை ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு பெறப்பட்ட ஆய்வறிக்கையின்படி வைகை நதிக்கரையில் சங்ககால நகர நாகரிகம் 2600 ஆண்டுகள் பழமையானது என தெரிய வந்துள்ளது.

கீழடியில் வழிபாடு தொடர்பான தொல்பொருட்கள் ஏதும் தெளிவான முறையில் இதுவரை கிடைக்கப் பெறவில்லை. கீழடியில் ரோம் நாட்டை சேர்ந்த அரிட்டைன் பானை ஓடு கிடைத்துள்ளதால் நாட்டினருடன் வாணிபம் மேற்கொண்டதற்கு இது சான்றாக உள்ளது.பெரியவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தும் வகையில் விளையாடும் சதுரங்க விளையாட்டில் பயன்படும் பல்வேறு அளவிலான சதுரங்க காய்கள் கிடைத்துள்ளது.

பெரியவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தும் வகையில் விளையாடும் சதுரங்க விளையாட்டு பயன்படும் பல்வேறு அளவிலான சதுரங்க காய்கள் கிடைத்துள்ளது. இதுவரை தமிழ் பிராமி எழுத்து வடிவத்தின் காலம் கிமு ஐந்தாம் நூற்றாண்டு என அழகன்குளம், கொடுமணல், பொருந்தல் அகழாய்வுகளின் படி கருதப்பட்டு வந்தது. தற்போதைய கீழடி ஆய்வின்படி தமிழ் பிராமியின் காலகட்டம் இன்னும் நூறு ஆண்டுகள் (கிமு ஆறாம் நூற்றாண்டு) பழமை வாய்ந்தது என தெரியவந்துள்ளது.

கீழடியில் வாழ்ந்த சங்ககாலச் சமூகம் வேளாண்மையையும் கால்நடை வளர்ப்பையும் முதன்மைத் தொழிலாகக் கொண்டிருந்தனர் என்பதை புனேவில் உள்ள டெக்கான் கல்லூரிக்கு எலும்புகளை பகுப்பாய்வு செய்த அறிக்கை வாயிலாக தெரிய வருகிறது. பெருங்கற்கால மற்றும் இரும்புக் கால மக்களின் எண்ணத்தை பிரதிபலிக்கும் எழுத்து வடிவமாக விளங்கியதும் தமிழ் பிராமிக்கு முந்தைய வடிவமாக விளங்கிய குறியீடுகள் கீழடி அகழாய்வில் 1001 பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தமிழ் பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட 56 பானை ஓடுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் குவிரன் ஆதன், ஆதன் போன்ற பெயர்களும் முழுமை பெறாத சில எழுத்துக்களுடன் கூடிய பானை ஓடுகளும் கிடைத்துள்ளன. | #StopHindiImposition மீண்டும் ட்விட்டரில் தொடங்கிய மொழிப்போர், ட்ரெண்டாகும் ஹேஸ்டேக்!

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top