#DivorcedCouple இந்தத் திரைபிரபலங்கள் ஏன் தங்கள் மனைவியை விவாகரத்துச் செய்தார்கள் என்று தெரியுமா?
  • 17:49PM Jul 06,2019 Chennai
  • Written By Kenny seb
  • Written By Kenny seb
  • 17:49PM Jul 06,2019 Chennai

பொதுவாகத் திரைப்படங்களில் காதலில் விழுந்து காதலில் குளித்துக் காதலில் சாப்பிட்டு நமக்குத் திரைப்படம் மூலம் இப்படிதான் காதலிக்க வேண்டும் என்று கற்றுத்தரும் ஹீரோக்கள் பலரின் நிஜ வாழ்க்கையை எடுத்துப் பார்த்தால்...அவ்வளவு தான்! நம் ரசித்துப் பார்த்த அனைத்து காதல் ஹீரோக்களின் நிஜ வாழ்க்கையிலும் விவாகரத்து போன்ற கசப்பான அனுபவம் இருக்கும். அது அவர்களின் வாழ்க்கை சம்மந்தப்பட்டதாக இருந்தாலும், பிரபலம் என்ற காரணத்தால் ஊர்முழுக்கச் சில கிசுகிசு பரவும். இந்தக் காரணத்தால் தான் அவர்களுக்கு விவகாரத்தானது, இவர் மீது தான் தவறு என்று ஏகப்பட்ட கிசுகிசு பரவும். அப்படி விவரகத்தான திரைபிரபலங்கள் பற்றி வெளியான கிசுகிசு பற்றி இங்குப் பார்ப்போம்.

#1 தற்போது கரீனா கபூரை காதலித்துத் திருமணம் செய்து கொண்ட சயஃப் அலி கானின் முதல் மனைவி பெயர் அம்ரிதா சிங். அம்ரிதாவுக்கும் ரோஷா கெட்டலோனா என்பவருக்கும் காதல் இருந்ததால் சயஃப் அலி கான் அம்ரிதாவை விவாகரத்துச் செய்தாராம்.

#2 பாலிவுடின் சிறந்த நடிகர் அமீர் கான் ஆவர்! மிகச் சாதுவான அமீர் கானின் முதல் மனைவி பெயர் ரீனா துட்டா. ரீனா எதுக்கெடுத்தாலும் கோவப்படுவாராம், இதனாலேயே இவருக்கும் அமீர் கானுக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது. இதனால் ஒருமுடிவுக்கு வந்து ரீனாவை விவாகரத்துச் செய்துள்ளார்.

#3 பாலிவுடின் நட்சத்திர ஜோடி பட்டியலில் போனி கபூர் மற்றும் ஸ்ரீதேவி இருப்பார்கள். ஆனால் ஸ்ரீதேவிக்கு முன்பு மோனா கபூர் என்பவருடன் போனி கபூருக்குத் திருமணம் ஆகி இருந்தது. ஸ்ரீதேவி உடனான காதலால் மோனா கபூரை விவாகரத்துச் செய்து ஸ்ரீதேவியைத் திருமணம் செய்துகொண்டார் போனி கபூர்

#4 செல்வராகவன் - சோனியா அகர்வால் திருமணக் கதை அனைவர்க்கும் தெரியும். அவரது திரைப்படங்கள் ஏற்படுத்திய பரபரப்பே இவர்களின் திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளியானது. யாரும் எதிர்பார்க்காத திரைக்கதையால் வானத்தை எட்டினாலும், அவரது பெயர் பெண்களிடையே கெடத் தொடங்கியது. இதனால் இருவரும் விவாகரத்து பெற்றனர்.

#5 ஏ.எல் விஜய் மற்றும் அமலா பால் தம்பதியினரின் திருமணம் கோலிவுட் வட்டாரத்தில் பெரிதாகப் பேசப்பட்டது. ஆனால் அவர்களின் விவாகரத்து செய்தி அதைவிடப் பெரிதாகப் பேசப்பட்டது. இவர்கள் இருவரின் லைப்ஸ்டைல் ஒருவருக்கு ஒருவர் செட்டாகாத காரணத்தால் விவாகரத்து பெற்றனர்.

#DivorcedCouple இந்தத் தம்பதிகள் போல இந்திய திரையுலகினர் பலரின் காதல், திருமண வாழ்க்கை யாரும் எதிர்பார்க்காதவாறு ஏமாற்றத்தில் முடிந்துள்ளது. விவாகரத்து ஆனாலும் இவர்களின் திருமண வாழ்க்கை அத்துடன் நிற்கவில்லை, மறுமணத்தில் இன்பத்துடன் வாழ்கின்றனர்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top