#RealtionshipGoal: ஆண்கள் பெண்களிடம் இதை மறைக்கறதுக்குக் காரணம் பயமா..? பாதுகாப்பா..?
  • 12:59PM Jun 15,2019 Chennai
  • Written By Kenny seb
  • Written By Kenny seb
  • 12:59PM Jun 15,2019 Chennai

திருமணம் ஆகி எவ்ளோ நாள் ஆகியிருந்தாலும் மனைவிகிட்ட இருந்து நிறைய விஷயங்களை மறைப்பாங்க. ஆனால் ஒரு சின்ன விஷயம் கணவன் எவ்வளவு சமாளித்தாலும் அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்பதை மனைவியால் கண்டுபிடிக்க முடியும்.இது போன்ற ரகசியங்கள் கணவரிடம் இருந்தால் அதைத் தெரிந்து கொள்ளவில்லை என்றால் மனைவிகளுக்குத் தலை வெடித்துவிடும்.இப்படி ஆண்கள் பெண்களிடம் மறைக்கும் சில முக்கியமான விஷயங்கள் மற்றும் அதன் காரணங்களை இங்குப் பார்போம் ..!

Related image

#1. கணவன் மனைவியிடம் அதிகம் மறைக்கும் விஷயம் அவர்களின் கடந்த கால உறவுகளைப் பற்றித் தான்.இதை மனைவியிடம் இருந்து மறைப்பதற்கான முக்கியக் காரணம் விஷயத்தை வெளியே சொன்னால் தன்னைப் பற்றி யாரும் தவறாக நினைப்பார்களோ என்ற எண்ணத்திலேயே இதை மறைத்துவிடுவார்கள்.

#2. உறவை தவிர்த்து ஆண்கள் ஆதிகம் மறைப்பது அவர்களின் Social Life பற்றி தான்.இது ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் பொருந்தும்.ஓரளவிற்கு மட்டும் தான் வெளியே சொல்வார்களே தவிர மற்ற விஷயத்தை அப்படியே மறைத்து விடுவார்கள்.இதை மறைப்பதற்கான முக்கிய காரணம் தேவையில்லாத சந்தேகங்களை குறைப்பதற்கு தான்.

#3. ஆண்களுக்கு அவர்களின் உடல்நலத்தை மீது அதிக அளவு அக்கறை இருக்கும்.அவர்களின் உடல்நலத்திற்கு எதாவது ஏற்பட்டுவிட்டால் முடிந்தவரை மனைவியிடம் இருந்து மறைக்க முயற்சிப்பார்கள்.இதற்கு முக்கியக் காரணம் தேவையில்லாத பதட்டத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று தான்.

#4. ஆண்களுக்கு எப்பொழுதுமே ஈகோ இருக்கும்.தன்னுடைய பயத்தைத் தன்னுடைய மனைவிக்குத் தெரிய கூடாது என்பதில் கறாராக இருப்பார்கள்.எப்பொழுதாவது ஒரு முறை அதிக அளவு உணர்ச்சிவசப்படும் போது தான் இதைத் தெரிவிப்பார்கள்.

#5.  ஆண்களுக்கு உடலுறவில் நிறைய ஆசை இருக்கும்.புது புது Position மீது அதிக ஆர்வம் இருக்கும் ஆனால் இதைப் பற்றி அவ்வளவு சீக்கிரம் மனைவியுடன் சொல்ல மாட்டார்கள்.இந்த விஷயத்தைப் பற்றித் தான் அதிகம் பேசியிருக்க வேண்டும் .ஆனால் கூச்சப்பட்டுக்கொண்டு இதைப் பற்றி வாயையே திறக்க மாட்டார்கள்.

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் இருவராலும் அனைத்து உண்மையையும் வெளிப்படையாகச் சொல்ல முடியாது.சில விஷயங்களை மறைப்பதில் தவறில்லை,ஆனால் அனைத்திற்கும் ஓர் எல்லை உண்டு என்பதை மட்டும் மறந்துவிடாதீர்கள்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top