உயரமான ஆண்கள் மீது பெண்களுக்கு அதிக ஈர்ப்பு இருப்பதற்கான காரணம் என்ன தெரியுமா..?
  • 16:59PM May 24,2019 Chennai
  • Written By Charulatha
  • Written By Charulatha
  • 16:59PM May 24,2019 Chennai

பெரும்பாலான பெண்களுக்கு உயரமான ஆண்கள் மீது தனி ஈர்ப்பு உண்டு.தன்னுடைய காதலரோ,கணவரோ தன்னைவிட உயரமாக இருக்க வேண்டும் என்பது பல பெண்களின் கனவாக இருக்கிறது.இதற்காகப் பெண்கள் பல காரணங்கள் கூறுகின்றனர். அவை.,

Image result for tall boy short girl

#1. உயரமாக இருக்கும் ஆண்கள் தங்களின் பக்கத்தில் இருந்தால் பெண்கள் பாதுகாப்பாக இருப்பதாக உணர்கின்றனர்.மேலும்,தங்களை யாரும் சீண்டமாட்டார்கள் என்ற எண்ணம் அவர்களுக்கு இருக்கிறது.

#2. உயரமான ஆண்களைப் பெண்கள் கட்டிப்பிடிக்கும் போது ஆண்களின் இதயமும் பெண்களின் காதுகளும் ஒரே இடத்திலும் இருக்கும்.அப்போது ஆண்களின் இதயத் துடிப்பை கேட்க முடியுமாம்.இது பெண்களுக்கு ரொம்பப் பிடிக்குமாம்.

#3. ஆண்கள் கருப்பு சிவப்பாக இருப்பதெல்லாம் பெண்களுக்குப் பெரிதாக அக்கறை இல்லையாம்.அவர்களுக்கு ஆண்கள் உயரமாக இருப்பது கூடுதல் ஈர்ப்பாம்.

#4. உயரமான ஆண்களைப் பெண்கள் தேர்வு செய்வதற்கு முக்கியமான காரணம் அவர்கள் அந்த விஷயத்தில் அவர்கள் கெட்டிக்காரர்களாக இருப்பதாக அவர்கள் நம்புகிறார்கள்.

#5. உயரமான ஆண்கள் உறவிற்கு மட்டுமின்றி வீட்டில் சில வேலைகளைச் செய்யவும் உதவியாக இருப்பார்கள் என்று பல பெண்கள் கூறுகின்றனர்.

#6. சோகமான தருணங்களில் இருக்கும் போது உயரமான ஆண்கள் கொடுக்கும் அரவணைப்பது பெண்களுக்கு ரொம்பப் பிடிக்குமாம்.இது மகிழ்ச்சியான தருணங்களுக்கும் பொருந்துமாம்.

உயரமான ஆண்கள்,குள்ளமான ஆண்கள் இவர்களுக்குள் என்ன வித்தியாசம் என்று சுத்தமாகத் தெரியவில்லை.ஆனால் எதோ சொல்கிறார்கள் நாமும் நம்புவோம்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top