#malarteacher: இந்த பொண்ணுக்கு இவ்ளோ துணிச்சலா? தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை இப்படி எந்த ஹீரோயினும் இல்லையே? காணொளியை கண்டது முதல் சாய்பல்லவி ரசிகராக
  • 19:57PM May 25,2019 Chennai
  • Written By AP
  • Written By AP
  • 19:57PM May 25,2019 Chennai

ப்ரேமம் படத்தில் ஒரு சில காட்சிகளில் வரும் மலர் டீச்சரை அறியாதவர்களே இருக்க முடியாது, கண்டிப்பாக எல்லோருடைய பள்ளி,கல்லூரி பருவத்தில் மலர் டீச்சர் போல ஒருவரை கண்டிப்பாக கடந்திருப்போம்..அய்யயோ, டீச்சரை அப்படியெல்லாம் பார்க்கக்கூடாது என ஏதோ ஒன்று உறுத்தினாலும் எல்லோர் மனத்திலும் ஒரு ஈர்ப்பு இருக்கும்.அது தவறான நோக்கம் அல்ல,வக்கிரம் அல்ல அதுவும் ஒருவிதமான உணர்வு தான் என்பதை அழகாக காட்டியிருப்பார் இயக்குனர்..அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு சாய்ப்பல்லவி எதார்த்தமான தோற்றத்துடன் என்ட்ரி கொடுக்கவே மலையாள திரையுலகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த தென்னிந்தியாவே ரசிக்க ஆரம்பித்தது..

இந்த படத்தின் மூலம் மலர் டீச்சரும் முன்னணி ஹீரோயினாக உருவெடுத்து விட்டார்.தமிழில் வாய்ப்புகள் குறைவாக இருப்பினும் மலையாளம்,தெலுங்கு போன்ற மொழிகளில் வளர்ந்துவரும் ஹீரோயினாக மாறிவிட்டார். தமிழில் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் NGK படத்தில் நடித்துவருகிறார்.இது குறித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அந்த பேட்டியில் படம் குறித்தும் தன் வாழ்க்கை குறித்தும் பலவற்றை பகிர்ந்துகொண்டார்..பிரபல அழகுசாதன நிறுவனம் விளம்பரத்திற்காக இவரை நடிக்க அழைத்த போது மறுத்துள்ளார் என்ற விஷயம் சில மாதங்களுக்கு முன்னர் வைரலானது. ஏன் மறுத்தார் என்பதற்கான காரணத்தை இப்போது கூறியுள்ளார். இவரது தங்கை சிறுவயது முதல் சாய்பல்லவியை பார்க்கும் போது அக்கா தன்னைவிட வெள்ளையாக உள்ளார் என்ற தாழ்வு மனப்பான்மையுடன் இருந்துள்ளார்.. தங்கைக்கு சாய்பல்லவி நிறம் கூட காய்கறிகளையும்,பழங்களையும் உண்ணுமாறு அட்வைஸ்களை கொடுத்துள்ளார்.. தன் தங்கையும் அவ்வாறே பிடிக்காத காய்கறிகளையம் கஷ்டப்பட்டு உண்டுள்ளார்..தன்னைவிட ஐந்துவயது குறைவான பெண்ணிற்கு அழகு குறித்த விஷயங்கள் எப்படியான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை தான் உணர்ந்ததாகவும் இப்படி இருக்க தான் இது போன்ற விளம்பரங்களில் நடிப்பது தன் தங்கையை போன்றவர்களை தவறாக வழிநடத்துவது போல ஆகிவிடும். ஆதலால் இப்படி ஒரு விளம்பரத்தில் நடித்துவரும் காசினை கொண்டு நான் மூணு சப்பாத்தி,கொஞ்சம் சாப்பாடு அவ்ளோதான் என்னுடைய தேவை,அதற்கு மேல் ஒன்றும் இல்லை.இந்தியர்களது நிறமே இதுதான்,அழகு குறித்து எழும் தாழ்வு மனப்பான்மையை களையவே அந்த விளம்பரத்திற்கு தான் நோ சொன்னதாகவும் கூறியுள்ளார்..

இவரது இந்த இன்டர்வியூவை பார்த்த பலரும் இவரை பாராட்டி வருகின்றனர்.ஏனெனில் ஹீரோயின் என்றாலே அழகு தான், இன்றைய உலகில் 90% பெண்கள் நம்புவது அழகிற்கு அவசியமானது மேக்கப் என்பதுதான்..பல முன்னணி கதாநாயகிகள் அழகுசாதன விளம்பரங்களுக்கு முன்னோடியாக இருக்கும் போது,சாய்பல்லவியின் வித்தியாசமான எண்ணங்கள் பணத்தை கடந்து , சமூகத்தில் மருத்துவராகவும் கதாநாயகியாகவும் தனக்கென ஒரு சில பொறுப்புகள் உள்ளது என்பதை ஆழமாக உணர்த்துகின்றன. தமிழில் இன்னும் தடம் பதிக்கவே இல்லை,ஆயினும் இவரது இந்த பேட்டி பலரை வசம் செய்துவிட்டது. ஒவ்வொரு ஹீரோயினும் இது போன்றே கதாநாயகியாக தன்னுடைய பொறுப்பை உணர்ந்து விளம்பரங்களில் நடித்தால்...??

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top