#pilot : விமானங்களில் விமானியும் , துணை விமானியும் ஒரே உணவை சாப்பிட மாட்டர்கள். அது ஏன் தெரியுமா ?
  • 10:37AM Oct 14,2019 India
  • Written By துரை முருகன்
  • Written By துரை முருகன்
  • 10:37AM Oct 14,2019 India

இந்த கட்டுரையை வாசிக்கும் பலருக்கும் விமான பயணம் என்பது சிறுவயது முதல் ஒரு கனவாகவே இருக்கும் சிலருக்கு அந்த கனவு நிறைவேறியிருக்கும் பலருக்கு அது கனவாகவே இன்றும் இருக்கும் ,நீங்கள் விமானத்தில் பயணம் செய்தவராகவே இருந்தாலும் விமானங்கள் குறித்த பல தகவல்கள் தெரிந்திரிருக்க வாய்ப்புகள் குறைவு அதனால் இந்த கட்டுரையில் விமானங்களில் விமானியும் , துணை விமானியும்  ஒரே உணவை சாப்பிட மாட்டர்கள். அது ஏன் தெரியுமா ? என்பதற்கான விடையை பார்ப்போம்

poilet1.jpg

விமான பயணங்கள் மிகவும் ஆபத்தானவை என்பது நாம் அனைவரும் அறிந்ததே  எனவே பாதுகாப்பிற்காக விமானங்களில் பல்வேறு விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன.இதில், விமானங்களின்  விமானியும் , துணை விமானியும்  ஒரே உணவை சாப்பிட கூடாது என்ற விதிமுறையும் ஒன்று. , உண்மை தான்  இப்படி ஒரு விதிமுறை நடைமுறையில் இருந்து வருகிறது. கேட்பதற்கு இது ஏதோ ஏற்றத்தாழ்வுகள் கடைபிடிப்பது போல உங்களுக்கு தோன்றலாம்

poilet2.jpg

ஆனால் அதற்கு பின்னால் நியாயமான காரணம் ஒன்று அடங்கியுள்ளது.அது என்னவென்றால் ஒரு உணவில் விஷம் கலக்கப்பட்டிருந்தாலோ அல்லது அது புட் பாய்சனை ஏற்படுத்த கூடியதாக இருந்தாலோ ஒரு விமானி  மட்டுமே பாதிக்கப்படுவார். மற்றொரு விமானி  பாதிப்படைய மாட்டார். எனவே அவர் மேற்கொண்டு பணிகளை தொடரலாம். இதன் காரணமாகதான் விமானங்களின் விமானிக்கும்  , துணை விமானிக்கும் வெவ்வேறு உணவுகள் வழங்கப்படுகின்றன.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top