#Love லவ் என்றாலே சில ஆண்கள் அலற இதுதான் முக்கியக் காரணம்! இதுக்கு முரட்டு சிங்கிளாவே இருக்கலாம்!
  • 19:04PM May 07,2020 India
  • Written By Kenny seb
  • Written By Kenny seb
  • 19:04PM May 07,2020 India

முன்பெல்லாம் காதல் என்றதும் கவிதை எழுத அமரும் வாலிபர்கள் தற்போது மீம்ஸ் போட்டு கலாய்க்க தொடங்கிவிடுகிறார்கள். காதலிக்காத சிங்கிள் பாய்ஸ் தான் இப்படி என்றால் காதலிக்கும் முக்கால்வாசி ஆண்கள் ஒரு வருடத்தில் பிரேக் அப் செய்து சோகத்தை வெளிப்படுத்த ஸ்டேட்டஸ் வைத்து சுற்றுகிறார்கள். லவ் என்றாலே ஆண்கள் அலறுவதற்கு ஏகப்பட்ட காரணங்களை உளவியலாளர்கள் கூறுகின்றனர். அதில் அதிகப்படியான ஆண்கள் காதலில் சொதப்புவதற்கு முக்கியக் காரணமாகப் பாதுகாப்பின்மை, வெளிப்படைத்தன்மை ஆகியவற்றைக் கூறுகின்றனர்.

via GIPHY

காதலில் பாதுகாப்பின்மை என்பது முக்கியமான விஷயம், பெரும்பாலான ஆண்களுக்குப் பாதுகாப்பின்மை மீது பயம் அதிகமாக இருக்கும். சில பெண்களின் நடவடிக்கையால் ஆண்களுக்கு இந்தப் பயம் ஏற்படுகிறது, அதுகடைசியில் அனைத்துப் பெண்கள் மீதும் திரும்பிவிடுகிறது. பொதுவாக ஆண்களுக்கு மற்ற ஆணை பாராட்டினால்..அவனது வளர்ச்சி , வெற்றியை பாராட்டினால் அது அவர்களுக்குப் பாதுகாப்பின்மை உண்டாக்கும். அதேபோலப் பெண்களுக்கு முந்தைய காதல் முறிவில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் குறித்தும், அதற்கு அந்தப் பெண் எப்படி நடந்துகொண்டார் என்பது குறித்தும் தெரியவந்தால் ஆண்களுக்குப் பாதுகாப்பின்மை உண்டாக்கும்.

via GIPHY

இவை போலத் தாங்கள் விரும்பும் பெண் தங்களை விடத் திறமையானவராக, அழகானவராக, வசதி படைத்தவராக மற்றும் அதிகம் சம்பாதிப்பவராக இருந்தால் ஒருவிதமான பயம் எப்போதும் மனதுக்குள் ஓடிக்கொண்டே இருக்கும். எங்குத் தனது காதலை மறந்து வேறு திறமையான ஆணை காதலிக்க முடிவெடுப்பாளோ என்றே எண்ணம் ஓடிக்கொண்டே இருக்கும். இதைத் தவிர்த்துத் தற்போது பாய் பெஸ்டீ பிரச்னையும் அதிகரித்து வருகிறது. இவ்வளவு பிரச்சனைகளுக்கு நடுவில் தங்கள் காதலிக்குச் செலவு செய்வது, தனது பழக்கங்களை மாற்றிக்கொள்வது போன்ற தியாகங்களும் அடங்குகிறது. இந்தப் பாதுகாப்பின்மை, வெளிப்படைத்தன்மை போன்றவற்றின் குழப்பத்தில் உறவை மேற்கொள்வதை விடச் சிங்கிளாகச் சந்தோசமாக இருப்பதே மேல் என்று சில ஆண்கள் காதலை தவிர்க்கிறார்கள்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top