Shoreline

#spiritual: நவகிரகங்கள் ஏன் ஒன்றையொன்று பார்த்துக்கொள்வதில்லை? விசித்திரமான உண்மை!

Sep 17 2019 11:33:00 AM

என்னதான் பலமுறை கோவிலுக்குள் சென்று வந்தாலும் ஒரு முறையாவது நவ கிரகங்கள் ஏன் ஒன்றையொன்று பார்த்து கொள்வதில்லை என சிந்தித்து இருக்கிறோமா??  ஏன் இவ்வாறு இருக்கும்படி ஆகம விதிகள் உள்ளன என்பது குறித்து இந்த பதிவில் காணலாம். 

நவகிரகங்கள்  குரு பகவான் என்ற சிவபெருமானின் கட்டுப்பாட்டில் இயங்குபவை.இவர்கள் தன்னுடைய கடமையில் இருந்து கடுகளவும் தவறுவதில்லை..எங்கே பிறரை பார்த்து கொண்டு பிறரிடம் பேசிக்கொண்டிருந்தால் நம்முடைய கடமையில் இருந்து தவற நேரிடும். ஆகையால் குரு பகவானின் கண்டிப்புக்கு ஆளாகி விடுவோம் என்பதால் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்வதில்லை என கூறப்படுகிறது. 

யார் ஒருவர் பிறரை பார்த்துக்கொண்டு,பிறருடன் தன்னை ஒப்பிட்டு கொண்டு தன்னுடைய நேரத்தை வீணாக்குகின்றார்களோ அவர்கள் இறுதிவரை தனது பிறவி பலனை அடைவதும் இல்லை தான் எதற்காக இந்த பூமியில் விதைக்கப்பட்டோம் என்ற காரணத்தையும் அறிந்துகொள்வதில்லை. நவகிரகங்களை போல யார்  தனது இலக்குகளை மட்டும் நினைத்து காரியம் செய்கின்றார்களோ அவர்களே வாழ்கையின் நோக்கத்தையும் பிறவிப்பலனையும் அடைகின்றார்கள் என நம்பப்படுகிறது.#Boswellic acid: சாம்பிராணி புகைக்கு கண்ணீர் வராதது ஏன்? வேதியலும் ஆன்மிகவியலும்!!