#lok sabha 2019:மூச்சு முட்டும் அளவிற்கு குவியும் வாக்கு, மோடியின் மனதுக்குள் உறைந்து போன வார்த்தை? திடீரென காணாமல் போகும் பிஜேபி தலைவர்களது பட்டம்?
  • 22:04PM May 23,2019 Chennai
  • Written By AP
  • Written By AP
  • 22:04PM May 23,2019 Chennai

லோக்சபா எலக்ஷன் முடிவுகள் குறித்த தகவல்கள் நொடிக்கு நொடி வெளியாகிவரும் நிலையில் இந்தியாவின் பல மாநிலங்களில் பாஜக வேட்பாளர்கள் அபாரமான வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளனர். லோக்சபாவில் மொத்தம் 545 இடங்கள் உள்ளன. இதில் 2 இடங்கள் குடியரசு தலைவரால் நேரடியாக நியமனம் செய்யப்படுகிறது மீதமுள்ள 543 இடங்களுக்கு எலெக்ஷன் மூலம் அமைச்சர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இப்படிஇருக்க பிஜேபி கூட்டணி சுமார் 350 இடங்களில் தனது முன்னிலையை நிரூபித்துவிட்டது.வாக்கு எண்ணப்பட்ட துவக்கம் முதலே பா.ஜ.க முன்னிலையில் இருந்தது. பாராளுமன்றத்தில் ஆட்சி அமைக்க 272 இடங்கள் போதுமானது, ஆனால் பிஜேபி மிக எளிதாக இந்த எண்ணிக்கையை தொட்டுவிட்டது. இதன் வாயிலாக மத்தியில் மீண்டும் பிஜேபி ஆட்சி அமைப்பது சாத்தியமாகிவிட்டது.பிரபலங்களும் இணையத்தில் வாழ்த்து கூறிய வண்ணம் உள்ளனர். ஒருவழியாக மோடி 11,755 அடி உயரத்தில் உள்ள மந்தாகினி கோயில் குகையில் தியானம் செய்ததற்கு பலன் கிடைத்தாயிற்று போல..

தென்னிந்தியாவை பொறுத்தவரையில் தமிழகம்,கேரளா,ஆந்திரா மாற்றம் இல்லாமல் பிஜேபிக்கு எதிர்ப்பலைகளே வீசுகிறது.கர்நாடகாவில் தன்னுடைய முன்னிலையை பதிவு செய்துவிட்டது, தெலுங்கானாவில் ஒரு சில இடங்களை தன் வசப்படுத்தியுள்ளது..

இந்தப்பக்கம் காங்கிரஸ் தன்னுடைய பாரம்பரிய தொகுதியான உத்திர பிரதேச மாநிலம் அமோதியிலே பின்தங்கியுள்ளது, 90 இடங்களை பிடிப்பற்கே திணற வேண்டிய நிலை உள்ளது. என்னதான் பிஜேபி மீது மக்களுக்கு, கருப்பு பணமதிப்பிழப்பு நடவடிக்கை , ஜிஎஸ்டி போன்ற அதிருப்தி இருந்தாலும் பிஜேபி முன்னிலை வகிப்பது அசாத்தியம் தான். இதற்கு பெரும்பாலும் புல்வாமா தாக்குதலுக்கு பின்னர் ஏற்ப்பட்ட மாற்றங்களும் முக்கிய பங்கு வகிக்கிறது,இராணுவம் தொடர்பான விவாகரங்களில் பிஜேபியின் வலுவான நடவடிக்கைகளும் முக்கிய காரணம். சிறப்பான மாநில தலைவர்களை உருவாக்கி,சரியான கூட்டணி அமைத்த பா.ஜ.காவின் தேர்தல் சாணக்கிய வியூகம் பாராட்டத்தக்கது.

பிரதமர் நரேந்திர மோடி இதுவரை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், தன்னை நாட்டின் காவலாளி (chowkidar) என முன்னிலை படுத்தி வந்தார்.இதனையடுத்து பிஜேபி தலைவர்களும் தங்களது பெயர்களுக்கு முன்னால் அவ்வாறான அடைமொழியை பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர்.இப்போது திடீரென chowkidar அடைமொழியை நீக்கிவிட்டார்,பின்னர் இந்த சொல் விடைபெற்று தன்னுள் உறைந்துவிட்டது என்றும் நீங்களும் அவ்வாறே செய்யுங்கள் என பதிவிட்டுள்ளார்.

 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top