#standardmilk: பால் பாக்கெட்டின் வெவ்வேறு நிறங்களுக்கு பின் உள்ள காரணம்! என்றாவது வேறு கலர் பாக்கெட்டை உபயோகபடுத்தியது உண்டா?
  • 12:46PM Sep 24,2019 Chennai
  • Written By AP
  • Written By AP
  • 12:46PM Sep 24,2019 Chennai

பால் பாக்கெட்டில் வெவ்வேறு நிறங்களை பார்த்திருப்போம்.ஆனால் அவை எதற்காக இவ்வாறு பிரிக்கப்பட்டுள்ளது என சிந்தித்து இருக்கிறோமா?  பால் பாக்கெட்டில் உள்ள ஒவ்வொரு நிறமும் அதில் அடங்கியுள்ள கொழுப்பின் அளவைக் குறிக்கிறது. அதன் காரணமாகவே ஆவின் பால் நான்கு வண்ணங்களில் வெளிவருகின்றது.

நீலநிறம், இது toned milk என கூறப்படுகிறது. இதில் 3% மட்டுமே கொழுப்பு சத்துகள் நிறைந்துள்ளது. பச்சை நிறம், இது முறையே standard milk என கூறப்படுகிறது. இதில் 4.5% கொழுப்பு சத்துகள் நிறைந்துள்ளது.சிவப்பு நிறம், இது full cream milk என கூறப்படுகிறது. இதில் 6% கொழுப்பு சத்துகள் நிறைந்துள்ளது. அதிக அளவு கொழுப்புப் பொருட்கள் கொண்ட பாலாக இது உள்ளது. பிங்க் நிறம்,  இது double toned milk என கூறப்படுகிறது. இதில் 1.5 % மாத்திரமே கொழுப்பு சத்துகள் நிறைந்துள்ளது.

பொதுவாக நாம், வீடுகளில் பிங்க் மற்றும் நீல நிற பால் பாக்கெட்டுகளை பயன்படுத்துவதையே பார்த்திருப்போம். ஏனெனில் இவற்றில் மட்டும் தான் அளவான கொழுப்பு பொருட்கள் நிறைந்துள்ளது. Full cream milk எனப்படும் 6% கொழுப்பு சத்துகள் நிறைந்த பால் பெரும்பாலும் பேக்கரிகளில் மற்றும் டீக்கடைகளில் பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் அவற்றில் எவ்வளவு அதிகமாக தண்ணீர் கலந்தாலும் அவற்றின் அடர்த்தி குறைவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வளவு விரைவில் கெட்டும் போவதில்லை.

கொழுப்பு ,மாவு ,புரதம் எவ்வளவு உள்ளது என்பதை அறிந்துகொள்ளவே வண்ண தரக்குறியீடு ஏற்படுத்தப்பட்டுள்ளது  அடுத்த முறை பால் வாங்கும் போது பாலின் தரம் என்ன என்பதை கேட்டு அல்லது அதில் அச்சிடப்பட்டுள்ளதை படித்து தரம் பார்த்து வாங்கலாம். #iamamyjackson: குழந்தை பிறந்த அடுத்த கணமே புகைப்படத்தை இணையத்தில் அப்டேட் செய்த எமி!!

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top