ஒரு நாயின் மூக்கு மனித கைரேகைக்கு சமம் - 30000 ஆண்டுகளாக தொடரும் பந்தத்தின் இரகசியம்.!
  • 13:01PM Feb 14,2019 Tamil Nadu
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 13:01PM Feb 14,2019 Tamil Nadu

your image

 

பொதுவாக ஒருவரை வசைபாடி திட்டும் போது கூட 'போடா நாயே' என்று நாய்கள் இனம் இழிவானது போல தோற்றத்தை ஏற்ப்படுத்திகொண்டு சிலர் திட்டுவதை காண முடியும். ஆனால் சில உண்மைகளை அறிந்து கொண்டால், உணர்வு ரீதியாக மனித இனத்தை விட நாய்கள் மேம்பட்டது என்பதை புரிந்துகொள்ள முடியும். நாய்களுக்கும் மனிதர்களுக்கும் இடையேயான தொடர்பு இன்றோ, நேற்றோ வந்தது கிடையாது. என்றைக்கு மனிதன் நாகரிக வாழ்க்கைக்கு அடியெடுத்து வைத்தானோ அன்றைக்கே தொடங்கிவிட்டது. ஆதி மனிதர்கள் வாழ்ந்த கற்காலத்திலேயே மனிதன் முதல் முதலில் பழக்கப்படுத்திய ஜீவராசியாக நாய் இருந்தது.

அப்போது வேட்டைக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது. இன்றைக்கு பல வீடுகளில் நாய் குடும்பத்தின் அங்கமாக பார்க்கப்படுகிறது. குழந்தை வரம் இல்லாத சிலர், நாயை குழந்தை போல பாவித்து வளர்த்து வருவதை பல இடங்களில் பரவலாக காண முடிகிறது. செல்லமாக வளர்த்த நாயை காணவில்லை என்றால் எவ்வளவு செலவு செய்தேனும் அதனை கண்டுபிடித்து மீண்டும், தங்களோடு வைத்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் தமிழக அளவில் விளம்பரம் செய்யும் அளவிற்கு அதன் மீதான பாசத்தை வெளிக்காட்டி வருகின்றனர் சிலர்.

இன்றைக்கு வளர்ந்து வரும் இயந்திர உலகில், மனித உணர்வுகள் மழுங்க தொடங்கி விட்டது. ஒரு மனிதன் இன்னொரு மனிதனை எதிரியாக பார்க்க தொடங்கி விட்டான். இந்த நேரத்தில் கள்ளகபடம் இல்லாத ஜீவராசிகளின் பாசம் மனிதனை அடிமையாக்கி விடுகிறது. அதனால் தான் மனிதர்களுக்கு கொடுக்கப்படும் அதே முக்கியத்தும் இன்றைக்கு நாய்களுக்கும் கொடுக்கப்பட்டு வருகிறது. இதனை அறியாத பலர் இன்னும் நாய்களை இழிவான பிறப்பாகவே பார்க்கின்றனர். உண்மையில் சொல்லப்போனால் போலியான உணர்வு இல்லாத ஒரு பாச பிணைப்பை நாய்களிடம் இருந்து பெற முடியும் என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

 

 

 

 

புகைப்பட ஆதாரம்: suryan fm

Share This Story

முருகானந்தம்

Top