நிஜம்தானா..??
  • 05:55AM Sep 25,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By Sundara Murthy
  • Written By Sundara Murthy
  • 05:55AM Sep 25,2017 Chennai, Tamil Nadu 600003, India

நதிகளுக்காகப் பேரணி ஒன்றை ஈஷா குழுமம் நடத்தி வருகிறது. இந்தப் பேரணியின் முனைப்பு நதிகளுக்கு அருகே உள்ள 1 கி.மி அளவிற்கு மரங்களை நடுவதாகும்.மேலும் நதிகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்தப் பேரணியை நடத்துகிறார்  சத்குரு ஜாக்கி வாசுதேவ்.   இந்தப் பேரணிக்காக குரல் கொடுக்க விரும்புவோர் 80009 80009 என்ற எண்ணிற்கு அழைக்குமாறு சொல்கின்றனர்.இந்தப் பேரணியை நதிகளுக்காகவா அல்லது அவர்களது பிரச்சாரத்திற்காகவா என்பது தெரியவில்லை.

 rally-for-rivers-route-415x246.jpg

இந்தப் பேரணி மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது.இந்தப் பேரணி செப்டம்பர் 2 முதல் அக்டோபர் 2 வரை நடைபெறுகிறது,சத்குரு அவர்களே இந்தப் பேரணியில் கலந்து கொள்கிறார்.கன்னியாகுமரி ஹிமாலயம் வரை இந்தப் பயணம் தொடர்கிறது.

 pjimage (11).jpg

அவரின் பயண முடிவாக மரம் நாடும் திட்டத்தை செய்ய அரசாங்கத்திடம் ஒப்புதல் பெரும் வகையில் டெல்லியில் முடிகிறது.மக்கள் மேல் குறிப்பிட்ட எண்ணிற்கு அழைக்கும் பட்சத்தில் ஒவ்வொரு அழைப்பையும் ஒரு வாக்காகக் கணக்கிடப்பட்டு அதை அரசாங்கத்திடம் மக்களின் ஆதரவைக் கட்டவுள்ளார். அதன் பேரில் அவர் அரசாங்கத்திடம் பேச்சு வார்த்தை நடத்தவுள்ளார்.

 pjimage (12).jpg

நதியருகே மரம் நடுவது ஆதரிக்க வேண்டியது ஆனால் இத்திட்டம் நதியைக் காப்பதிற்கான வழி இல்லை. நதிநீரைக் காக்க வேண்டும் என்றால் மணல் அள்ளுவதைத் தடுப்பதும் அணைகளை அமைப்பதும் மேலும் இருக்கும் ஆறுகளை தூருவாருவதும்,ஆறுகளைப் பராமரிப்பதும் ஒரு நல்ல வழியாகும் .அவரின் நோக்கம் மரம் நடுவதா இல்லை நதிகளைக் காப்பதா???

 pjimage (13).jpg

இவர் பேரணிக்காக மெர்சிடிஸ் பென்ஸ் G63 AMG காரை பயன்படுத்துகிறார்.மேலும் அவருடன் செல்பவர்கள் மகேந்திர suv வகை கார்களை பயன்படுத்துகின்றனர். இந்தப் பேரணியால் ஏற்படும் மாசைத் தடுப்பதற்கே எட்டு லட்சம் மரங்களை நட வேண்டும்.இப்படி மரங்களை நடுவது தான் திட்டம் என்றால் ஒரு சிலை வைப்பதற்கு ஒரு காட்டையே அழித்திருக்கக்கூடாது.

 thequint%2F2017-02%2F2903d58d-94de-4c4c-a40d-426c961d73e6%2Fmeme3.jpg

80009 80009 என்ற எண்ணை இந்தப் பேரணிக்காக மட்டும் தான் பயன்படுத்தப்பட்டுள்ளதா..?? இந்த எண்ணை மதச் சார்புடைய ஒரு தேசிய கட்சி தங்கள் கொள்கைகளைப் பரப்புவதற்காக பயன்படுத்தியுள்ளனர்.சத்குரு அவர்கள் தன்னுடைய அமைப்பு சார்பற்ற ஒரு இயக்கம் என்று கூறியுள்ளார் ஆனால் ஒரு தனிப்பட்ட கட்சி பயன்படுத்தும் ஒரு ஊடகத்தைப் பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லை. அந்தக் கட்சியை சேர்ந்த பலரும் இந்த அமைப்பிற்கு ஆதரவு குரல் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 DJWRvn9XgAAD7k9.jpg

மழை தரும் காட்டை அழித்துச் சிலை வைத்தபின் நதிநீருக்காகக்  குரல் கொடுப்பது வேடிக்கையாக இருக்கிறது.

 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top