#lord murugan: முருகனின் அறுபடை வீடுகளும் அதன் பின் உள்ள வியக்கவைக்கும் தகவல்களும்!!
  • 23:09PM Jun 07,2019 Palani
  • Written By AP
  • Written By AP
  • 23:09PM Jun 07,2019 Palani

ஆறு என்னும் சொல்லுக்கு வழி என்றும் நெறி என்றும் பொருள் உள்ளன.ஆற்றுப்படுத்தும் என்றால் அறிவு திறன் கொண்டவன் அறியாதான் ஒருவனை நல்வழிப்படுத்தலாகும். பல ஆற்றுப்படைப் பாடல்களை சங்க கால தமிழ் இலக்கியம் கொண்டுள்ளது உதாரணத்திற்க்கு பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, திருமுருகாற்றுப்படை என பலவுண்டு. நாளடைவில் ஆற்றுப்படை வீடுகளை ஆறுபடை வீடுகளாக்கிவிட்டனர்.

திருப்பரங்குன்றம், இங்குதான் முருகன் தெய்வானையினை மணந்ததாகக் கூறப்படுகிறது. திருச்செந்தூர், இங்கு சூரபத்மனை அழித்ததாக கந்த புராணம் எடுத்துரைக்கிறது. பழனி, ஞானப்பழம் தனக்கு கிடைக்காத காரணத்தால் ஆண்டியான இடம்.. திருவேரகம், பிரணவ மந்திரத்தின் பொருளை கூறிய இடமாக கூறப்படுகிறது. திருத்தணி,வள்ளியை முருகன் திருமணம் செய்து கொண்ட தலமாகும் புராணங்கள் கூறுவது.
பழமுதிர்சோலை, சிறுவனாய் வந்து ஔவையாரை சோதித்தது.

முருகனின் அறுபடை வீடுகள் குறித்த தகவல்கள் சில புராணங்களில் இருந்து முரண்பட்டுள்ளது. அவற்றுள் சில, முருகன் கோயில் திருவிழாக்களில் தெய்வானையினை முதல் மனைவியாகவும், வள்ளியை இரண்டாவது மனைவியாகவும் உருவகப்படுத்திக் கொண்டாடுவதனைப் பார்க்கலாம். திருமுருகாற்றுப்படையை எடுத்துக்கொண்டால் தெய்வானை பற்றிய குறிப்புகள் எதுவும் இடம் பெற்றிருக்காது, வள்ளி மட்டும்தான் முருகனின் இணையாகக் கூறப்படுகிறார். இந்த புராணங்களில் முதல் மனைவியாக தெய்வானை குறித்து செய்திகள் ஏதும் இடம்பெறாதது ஏன் ?

அடுத்து முருகப்பெருமான், சூரனை வதம் செய்து அவனை மயில் வாகனமாகவும் சேவற்கொடியாகவும் ஆக்கியதாக கந்தபுராணம் எடுத்துரைக்கும். அப்படியானால், சிறுபிள்ளையாக இருக்கும் போதே மாம்பழத்திற்காக மயிலேறி உலகம் உலகத்தை வலம் வந்தது எப்படி என்ற முரணான கேள்வியும் எழுகிறது.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top