மெரீனா புரட்சி – உண்மைப் பின்னணி…
  • 11:16AM Sep 12,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 11:16AM Sep 12,2017 Chennai, Tamil Nadu 600003, India

நவம்பர் 8, பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் அறிவிப்பு.  அதனால் ஏற்பட்ட குழப்பங்கள் ஆகியவற்றின் துவக்கம்.  வங்களின் வாசல்களில் வேலை அனைத்தையும் விட்டு காத்துக் கிடந்தவர்களுள் - பேசிக் கொண்டிவர்கள் பலர்.  இறப்பு எண்ணிக்கை அதிகரிக்க, அதிகரிக்க மக்களின் கோபம் இளைய தலைமுறை மீது திரும்ப, whatsapp chat-கள் திசை மாற ஆரம்பித்தன.  தங்களாலும் ஒரு மாற்றத்தை உண்டு பண்ண முடியும் என நினைத்த/நம்பிய கிட்டதட்ட 30 இளைஞர்கள் இணைந்து, முதன்முதலாக ஒரு குழுவை உருவாக்கினர்.  அந்தக் குழுவின் நோக்கம் அரசியலுக்கு அப்பாற்பட்ட மக்கள் சக்தியை ஒன்றிணைப்பதாக இருந்தது.  அந்தக் குழுவினர் பல்வேறு விதங்களாய் தேர்வு செய்யப்பட்டனர். பொதுவான தகுதிகள் எனச் சமூக வலைத் தொடர்பு மேலாளர்கள், மக்களின் மனதை நன்கு அறிந்தவர்கள் போன்றவர்கள் மட்டுமே இணைக்கப்பட்டனர்.  தெளிவான பாதை முடிவு செய்யப்பட்டு, அனைவரும் அடுத்து ஏற்படக் கூடிய பிரச்சினையான ஜல்லிக்கட்டை நடத்திக் காட்டுவது என முடிவு எடுக்கப்பட்டது.

குழுவினர் அனைவரும் பிரிந்து, பல்வேறு தளங்களில் ஒத்த கருத்துடையவர்களை கண்டறிந்து அவர்கள் மூலம் பல்வேறு புதிய Whatsapp குழுக்களை உருவாக்க, கிட்டத்தட்ட பத்து நாட்களுக்குள்ளாகவே உலகெங்கும் கிளை பரப்பிய ஒரு பெரிய ஆலமரமாக மாறிவிட்டது.  சரியாக அதே நேரம், ஜல்லிக்கட்டு வழக்கைத் தன்னிச்சையாக விசாரித்த நீதிமன்றம், இந்த ஆண்டும் தடையை நீட்டிக்க, இந்தக் குழு எதிர்பார்த்த வாய்ப்பு தன்னாலே ஏற்படுத்தப்பட்டது. (சுப்ரீம் கோர்ட்டு தன்னிச்சையாக அழைத்து விசாரித்தாலே, மாணவர்கள் புரட்சியை ஆரம்பித்துவிடுவார்கள் போல… அன்று ஜல்லிக்கட்டு, இன்று நீட்…) 

பல நூறு குழுக்களில் இவர்களின் செயல்பாடுகள் மட்டும் தனியாக, வித்தியாசமானதாய் அமைந்திருந்ததால் - வெகு விரைவிலேயே மக்களின் நம்பிக்கையை முழுதுமாக பெற்றனர்.  குழுவின் உறுப்பினர்களை ஒரே கவனத்தில் வைத்திருந்தது, குழுவில் வேறு எந்தச் செய்தியையும் பகிர விடாதது, கண்ணியமற்ற பேச்சினை கண்டித்துத் திருத்தியது, அனைவரின் சந்தேகங்களை தீர்த்தது என, இவர்கள் ஒரு தனி Pattern உருவாக்கினர்.   அதில் முக்கியமானது, எந்த அரசியல் சார்பும், மக்களுக்கும் எதிர்விளைவை ஏற்படுத்தும் என்பதால், அவர்களைக் குழுக்களுக்குள் கொண்டு வரக்கூடாது என்பதே…

ஜனவரி 8, முதல் கட்டமாக ஒரு அமைப்பு மட்டும் களமிறங்க, 3000 பேர் தன்னிச்சையாக பங்கு கொண்டனர். ,அடுத்தது இந்தக் குழு அனைவரையும் சரியாக தயார்படுத்தி வைக்க, இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு கிடையாது என்ற மத்திய அரசின் அறிவிப்பு, முழு வட்டமான போராட்டமாக உருவாக வழி செய்தது.  பல்வேறு ஊர்களில் இருந்து வந்து அமர்ந்த மக்களின் அடிப்படைத் தேவைகளை தீர்க்க, தங்களுக்குத் தெரிந்த நண்பர்கள் மூலம் முடிந்த அளவு அமர்ந்திருக்கும் மக்களுக்கு உணவு வழங்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதே சமயம், மற்றவர்கள் அந்தப் போராட்டத்தைத் தொடர் போராட்டமாக ஆவண செய்யத் துவங்கி இருந்தார்கள்.  இருக்கலாம், ஆனால் சாப்பாடு எனக் கேள்வி வருமுன் உணவுப் பொட்டலங்கள் வரத் துவங்கியது.  பல்வேறு தரப்பினரும், பல்வேறு காரணங்களுக்காக வந்து அமர ஆரம்பித்தனர்.  அரசியல் கட்சிக்காரர் உட்பட.

போராட்டம் மிகப்பெரிய அளவில் நடக்கத் துவங்கியது. சென்னையில் வாரம் 6 லட்சம் உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டது.  குழு ஆரம்பித்த பணியை மற்றவர்களும் முன்னெடுக்க நாள் ஒன்றுக்கு 3 லட்சம் பாக்கெட்டுகள், ஒரு மனிதனுக்கு சராசரியாக மூன்று வேளை உணவு, இருவேளை குளிர்பானங்கள், பிஸ்கெட், பப்ஸ், போன்ற நொறுக்குத் தீணிகளென குவிந்தது.  இது சென்னையில் மட்டும். கிராமப்புறங்களில் இன்னும் நிறைய,,, போராட்டக்காரர்கள் மக்களிடையே மகன்களாகவும், மகள்களாகவும் மாறினர். யாரோ பெற்ற பிள்ளைகளுக்காக மக்கள் அடிவாங்கவும் தயாராகினர்.

வேறு வழியின்றி, அரசு கடைசி முயற்சியாக மின் விளக்குளை அணைத்தது. எந்த பெண்ணிடமாவது கண்ணியக் குறைவாக நடந்தால் விளைவுகள் விபரீதமாகி இருக்கும்.  ஆனாலும், போராட்டக் குழுவினர் அலைபேசி வெளிச்சத்தின் மூலம், ஒரு பெரிய மாயாஜாலத்தை நிகழ்த்தினர்.  இறுதியாக, சட்ட வரைவு போடப்பட்டு, ஜல்லிக்கட்டு அனுமதிக்கப்பட உள்ள நிலையில் போராட்டக் குழு, தங்களுக்குள்ளாகப் பல கட்சிகளாகப் பிரியத் துவங்கியது.  கட்சியைப் பற்றிய விவாதங்கள் பிறகு, முதலில் போராட்டம் என இந்தக் குழு எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேட்காமல், தங்களுக்குள்ளாகவே தலைவர், செயலாளர், பொருளாளர் எனப் பதவி பிரிக்க ஆரம்பித்தனர்.  அதன் பிறகு கூட்டம், இந்தக் குழுவின் கட்டுப்பாட்டை விட்டு விலகி, தங்கள் தலைமை சொன்னதைச் செய்யத் துவங்க, இந்தக் குழு மீண்டும் தங்களின் whatsapp group-ல் இணைந்தனர்.  இறுதியாக ஒரு முயற்சி செய்வது என முடிவுகள் எடுக்கப்பட்டு, அன்று இரவு அனைத்து குழுக்களிடமும் ஒரு முறை பேச்சுவார்த்தை நடத்தி, அதுவும் தோல்வியில் முடிந்தது.

அதே சமயம், பல புதிய அரசியல் கட்சிகள் என்ற இவர்களின் இரகசியங்கள் கசிந்து எதிர்வினை ஏற்பட்டிருந்தது.  இதனை கவனித்த குழு, போராட்டக்காரர்களைக் கலைந்து செல்ல அறிவுறுத்தியும், தன்னிச்சையான கட்சிகள் அவர்களைக் கலைந்து செல்லவிடாமல் நிறுத்தி வைத்தனர்.  மாற்றத்திற்கான விதை ஏமாற்றமானதால், வேறு வழியின்றி இந்தக் குழு கலைக்கப்பட்டு அவரவர் அவரவர் வேலைக்கு திரும்பச் சென்றுவிட்டனர்.  வேண்டுகோள்கள் வைக்கப்படாததால், இரவே பெரும்பாலான உணவு வழங்கப்படுவது நின்றுவிட்டிருந்தது. மறுநாள் 23/08/2017, மெரினா போராட்டம் - கூட்டத்தில் புகுந்த வன்முறையாளர்களால் போராட்டம் முழுமையாக;f கலைக்கப்பட்டு, ஆங்காங்கே மக்கள் அமர்ந்து ஆர்ப்பாட்டம் துவங்க முயற்சி செய்தும், அவர்களின் திடீர் தலைவர்களால் அவர்களின் தேவைகள் சரிவர கவனிக்கப்படாததால், வேறு வழியின்றி முழுமையாகக் கலைந்தனர்.

அதன் பிறகு எந்தப் போராட்டத்திலும் அந்தக் குழு இறங்கியதாகத் தெரியவில்லை. பல்வேறு இணைப்புக் குழுக்களும் அவர்களாலேயே கலைக்கப்பட்டது.  தமிழகம் புதிதாகப் பல புதிய கட்சிகளை கண்டும், அவை பெரிதாய் பேசப்படும் நிலை உருவாகவில்லை. காரணம் புதிதாய் யோசிக்கவும், மற்றவர்களை உத்வேகப்படுத்தவும், மிக முக்கியமாக ஒருங்கிணைக்கவும் அந்தக் குழு இல்லை.  மிகப் பெரியதாகத் தோன்றி, உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ஒரு போராட்டம் நடந்த காலத்தில் நாம் வாழ்ந்தோம் என்பதும், ஜல்லிக்கட்டு தடை நீக்கம் மட்டுமே அதன் மிச்சங்களாய் என்றும் நமக்குள் வாழ்ந்திருக்கும் என்பது சத்தியமாக மிகையில்லை…

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top