Lushgreen

ஜடேஜாவுக்கு பிடித்த பாடல் இதுவென்று யாரும் எதிர்பார்க்கவில்லையே? எப்போதும் கேப்டனுக்கு பிடித்த ஆல் ரவுண்டராக இருக்கும் இவரோட ரசனை ரொம்ப சரியாத்தான் இருக்கு!

Jun 11 2021 06:17:00 PM

இந்திய கிரிக்கெட் அணியின் தவிர்க்க முடியாத ஆல் ரவுண்டராக வலம் வருபவர் தான் ரவீந்திர ஜடேஜா. இடது கை வீரரான ஜடேஜா பேட்டிங், பவுலிங், பீல்டிங் என்று அனைத்திலும் தனது திறமையை காட்டி அசத்தி வருகிறார். ஜடேஜாவின் பேட்டிங் திறன் பற்றி பல்வேறு விமர்சனங்கள் கடந்த காலத்தில் எழுப்பப்பட்டது. எல்லா விமர்சனங்களுக்கும் தனது பேட் மூலம் பதில் தந்தார். 2019ம் ஆண்டு உலகக்கோப்பை தொடர், கடந்த வருடம் நடந்த ஆஸ்திரேலியா தொடர் என்று முக்கியமான போட்டிகளில் தனது பேட்டிங் மூலம் மிரட்டினார்.

ravindhra-jadeja

இடையில் காயத்தால் அவதிப்பட்ட ஜடேஜா அதிலிருந்து மீண்டு வந்து ஐபிஎல் தொடரில் வெளுத்து வாங்கினார். போட்டியின் ஒரு ஆட்டத்தின் கடைசி ஓவரில் 5 சிக்ஸர்களை பறக்கவிட்டு சூப்பரான ஆல் ரவுண்டர் என்று எப்போதும் தன்னை நிரூபித்து வருகிறார். இந்த நிலையில் ஜடேஜாவுக்கு பிடித்த பாட்டு பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

ravindhra-jadeja

தமிழக கிரிக்கெட் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் ஜடேஜாவுக்கு பிடித்த தமிழ் பாடல் என்ன என்று தனது யூ டியூப் சேனலில் குறிப்பிட்டுள்ளார். அந்த வீடியோவில் அஸ்வின், நான் எப்போதும் ஜிம்மிற்கு போகும் நேரத்தில் தமிழ் பாடல்களை அதிகம் கேட்பேன். சமீபத்தில் ஒரு நாள் ஜடேஜாவை ஜிம்மில் சந்தித்த போது அவர் என்னுடைய பிளே லிஸ்ட்டை பார்த்தார். அப்போது விஜயகாந்த் நடித்த வானத்தைப்போல திரைப்படத்தில் இருக்கும் எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை என்ற பாடல் பாடிக்கொண்டிருந்தது.

ravindhra-jadeja

பிறகு அந்த பாடல் பிடித்துப்போகவே அதைப்பற்றிய தகவல்களை ஜடேஜா கேட்டு தெரிந்து கொண்டார். இவ்வாறு அஸ்வின் கூறியுள்ளார். ஏற்கனவே ஜடேஜாவுக்கு பிடித்த தமிழ் படம் விஜய் நடிப்பில் வெளிவந்த தெறி என்ற தகவல் வெளியாகியிருந்த நிலையில் இப்போது அவருக்கு பிடித்த தமிழ் பாடலின் தகவலும் வெளியாகியுள்ளது.

ravindhra-jadeja

இந்திய வீரர்கள் பலருக்கும் தற்போது தமிழ் படங்கள் மற்றும் பாடல்களின் மீது ஆர்வம் அதிகரித்து வருவதை காண முடிகிறது. விஜய் நடித்த மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடலை ட்ரெஸ்ஸிங் ரூமில் வைத்து இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பலருக்கும் அஸ்வின் ஆடிப்பாடி சொல்லிக்கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.