ரேஷன் மாணியங்கள் இரத்து, இனி???
  • 10:50AM Sep 20,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 10:50AM Sep 20,2017 Chennai, Tamil Nadu 600003, India

ஆதார் கார்டு, ஸ்மார்ட் கார்டு என பல வண்ணக் கலர் பலூன்களுக்கு நடுவே வந்தே விட்டது அறிவிப்பு – ரேஷன் மானியம் இரத்து என்று.  முன்பெல்லாம் அரசியல் கட்சிப் பதவிகளில் இருப்பவர்களுக்கு என்ன அறிவிப்பு வருமோ என்ற பயம் இருக்கும்.  தற்போது இந்தப் பயம் மக்களுக்கே இருக்கிறது.  8500 ரூபாய்க்கு மேலே சம்பாதிக்கும் எவருக்கும் ரேஷன் இல்லை எனத் தொடங்கி. ஒரு பெரிய லிஸ்டே வந்தது. கிட்டத்தட்ட. “போங்கடா. இனி எவனுக்கும் ரேஷன் இல்லை…” என்ற கதைதான்.

இவை அனைத்தையும் சொல்லிவிட்டு, மானியம் நேரடியாக வங்கிக் கணக்கில் கொடுக்கப்படும் என அறிவிப்பு வேறு.  நியாயமாக வெறும் 30 ரூபாயில் ஒருவேளை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் மந்திரி ஏழைகள் மானியம் இரத்து செய்யப்படாது, ஆனால் 10,000 15.000 சம்பாதிக்கும் பணக்காரர்களுக்கு ரேஷன் வழங்கப்படுவது மிக அநியாயம் அல்லவா??? என்னதான் கணக்கு இது. சராசரியாக ஒரு மனிதன் இன்றைய விலைவாசியில் 7000 ரூபாய் வாடகை மட்டுமே கட்ட வேண்டியிருக்கும். அதன் பிறகு, வெகு அற்பமாக மளிகை சாமான்கள் வாங்குவதற்கே 2500 முதல் 3000 வரை தேவைப்படும்.  அன்றாடத் தேவைகள் என நாளைக்கு 150 வைத்துக் கொண்டால் 4500, போக்குவரத்து செலவுகள் எனக் கணக்கிட்டால் இன்னுமொரு 2000ம் (ரெண்டு பஸ் பாஸ்) வைத்துக் கொண்டாலே 16500… கிட்டதட்ட அரசு அறிவித்த தொகையிலிருந்து இரு மடங்கு இருந்தால்தான் இன்றைக்குக் கீழ் நடுத்தரக் குடும்பமாகவே இருக்க முடியும்.

இது மட்டுமன்றி கேஸ் மானியம் முதலில் வங்கியில் போடப்பட்டதும், அதை நாட்டுக்காகத் தியாகம் செய்யப்பட்டதும் நடந்து முடிந்து, தற்போது 2018ல் மாணியம் முழுமையாக இரத்து. அதே போல ரேஷன் மானியமும் இன்னும் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளில் நிறுத்தப்படும். அப்போது அதிக விலை கொடுத்து பொருட்கள் வாங்க மக்கள் பழக்கப்படுத்தப் பட்டிருப்பார்கள். கேஸ் மானியம் எவ்வாறெல்லாம் வந்தது என அனைவருக்கும் தெரியும்.  இதை நியாயப்படுத்த ஆயிரம் காரணங்களை சொன்னாலும், ஒன்று மட்டும் மக்களின் மனதின் குரலாகவே சப்தமில்லாமல் ஒலித்துக் கொண்டிருக்கும்.

வெறும் 8500 ரூபாயில் ஒரு மாதம் எங்களோடு வாழ்ந்து பாருங்கள் என்பதே… முடியுமா???

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top