அசாத்தியமான பலன்கள் : டிசம்பர்7ல் உங்கள் இராசி நிகழ்த்தும் அற்புதங்கள்.! (விளக்கமான விபரம்)
  • 22:46PM Dec 06,2018 Tamil Nadu
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 22:46PM Dec 06,2018 Tamil Nadu

your image

 

மேஷம்:

இன்று உங்கள் முயற்சிகளை தைரியமாக மேற்கொள்ள வேண்டும். நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதன் மூலம் மனதில் உள்ள கவலைகளை எதிர்கொண்டு வெற்றி காண முடியும். இன்று நேரத்துடன் பணிகளை முடிக்க இயலாது. என்றாலும் திட்டமிடுவதன் மூலம் பணிகளை சமூகமாக ஆற்ற இயலும். 5உங்கள் துணையுடன் பேசும் போது கவனமாகப் பேச வீண்டும். கவனமற்ற வார்த்தைகள் உறவின் நல்லிணக்கத்தை கெடுக்கும். வீணான செலவுகள் காணப்படும். பணத்தை கவனமாகக் கையாள வேண்டும். அதன் மூலம் நஷ்டத்தை தவிர்க்கலாம். தூக்கமின்மை காரணமாக சில பிரச்சினைகள் ஏற்படும்.

ரிஷபம்:

இன்றைய நாள் உங்களுக்கு சாதகமான பலன்களை அளிக்கும். இன்று எடுக்கும் முக்கிய முடிவுகள் நல்ல பலனைத் தரும். உங்கள் இலக்குகளை நிறைவேற்ற பாடுபடுவீர்கள். உங்களின் அபாரமான செயல் திறன் பணியிடத்தில் உங்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெற்றுத் தரும். உங்கள் உணர்வுகளை உங்கள் துணையிடம் மனம் திறந்து கூறுவீர்கள். இதனால் இருவருக்குமிடையே நல்லுறவு ஏற்படும். இன்று நிதிநிலைமை அதிர்ஷ்டகரமாக இருக்கும். பணம் நிறைந்து காணப்படும். இன்று பெரிய அளவிலான ஆரோக்கியப் பிரச்சினைகள் ஏதும் இருக்காது. உங்களிடம் காணப்படும் உற்சாகம் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

மிதுனம்:

இன்று முன்னேற்றமான பலன்கள் கிடைப்பதற்கு சாதகமான நாள். உங்கள் புத்திசாலித்தனம் மற்றும் திறமை மூலம் வெற்றி காண்பீர்கள். நம்பிக்கை உணர்வின் காரணமாக மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். இன்று குறித்தநேரத்தில் பணிகளை முடிப்பீர்கள். வேலை தொடர்பான பயணத்திற்கான சாத்தியம் உள்ளது. உங்கள் இனிமையான வார்த்தைகள் உங்கள் துணையை மகிழ்விக்கும். வெளியிடங்களுக்கு செல்வதன் மூலம் உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வு ஏற்படும். தொலை தூரத்திலிருந்து கிடைக்கும் பணம் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். உபரிப் பணத்தை சேமிப்பீர்கள். உங்களிடம் காணப்படும் நம்பிக்கை நிறைந்த மன நிலை காரணமாக இன்று நீங்கள் சிறந்த ஆரோக்கியத்தை பராமரிப்பீர்கள்.

கடகம்:

இன்று உங்கள் முயற்சிகள் வெற்றியடைய சாதகமான நாளாக இருக்கும். திடமான போக்குடன் கடினமாக உழைத்தால் வெற்றி பெற இயலும். பணிகளைக் கையாளும் போது பொறுமை தேவை. முறையாக திட்டமிட்டால் இன்றைய இறுக்கமான பணிகளை திறமையாக கையாள முடியும். உங்கள் மனதில் குழப்பங்கள் காணப்படும். அந்த உணர்வை உங்கள் துணையிடம் வெளிப்படுத்துவீர்கள்.  இன்று செலவுகள் அதிகமாக காணப்படும். அமைதியாக இருந்து நல்ல ஆரோக்கியத்தை பராமரியுங்கள்.

சிம்மம்:

இன்று சில பிரச்சினைகள் காணப்படும். அவற்றை நீங்கள் சாமார்த்தியமாக கையாள வேண்டும். விவேகமாக நடந்து கொள்ள வேண்டும். பிறருடன் பேசும்போது கவனமாகப் பேச வேண்டும். பணிச்சுமை அதிகமாக காணப்படும். நீங்கள் உங்கள் துணையிடம் மென்மையாக நடந்து கொள்வீர்கள். உங்கள் துணையிடம் பொறுமையை கடைபிடிப்பது சிறந்தது. இன்று நிதிநிலைமையில் கட்டுப்பாடுகள் காணப்படும். உங்கள் பணத்தை திட்டமிட்டு கையாள வேண்டும். குளிர்ச்சியான உணவுகளை தவிர்த்தல் நல்லது.

கன்னி:

இன்று நீங்கள் சிறந்த மன ஆற்றலுடனும் காடுப்பட்டுடனும் காணப்படும் சிறந்த நாள். இன்று பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபடுவதன் மூலம் அமைதி பெறுவீர்கள்.  இன்று பணிகளை குறித்தநேரத்தில் முடிக்கும் சூழல் காணப்படும். பணிகளை விரும்பி எளிதாக ஆற்றுவீர்கள்.உங்கள் துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள். இருவரிடையே பரபஸ்பர மதிப்பு உயரும். பணப்புழக்கம் இன்று சிறப்பாக இருக்கும். உங்கள் பணத்தை பயனுள்ள விஷயங்களுக்கு பயன்படுத்துவீர்கள். இன்று உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இன்று நீங்கள் முழு ஆரோக்கியத்தை உணர்வீர்கள்.

துலாம்:

இன்று உங்களிடம் தைரியமான உறுதியான அணுகுமுறை காணப்படும். உங்கள் இலக்குகளில் வளர்ச்சியும் வெற்றியும் அடைவீர்கள். பணிகளை குறித்தநேரத்தில் முடிப்பதற்கான சாத்தியம் உள்ளது. உங்கள் செயல்திறனில் நல்ல தரத்தை பராமரிக்க இயலும். உங்கள் மகிழ்ச்சியான உணர்வுகளை உங்கள் துணையிடம் வெளிபடுத்துவீர்கள்.முன்னோர்களுக்கு திதி செய்வீர்கள்,இது உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும்.கருணை உடையவர்களாக இருப்பீர்கள்.அதிகமாக தானம் தர்மம் செய்வீர்கள்.தொழில் முன்னேற்றம் அமோகமாக இருக்கும்.இன்று திருமணம் பேச்சு எடுக்க உகந்த நாள்.குடும்பத்தில் அமைதி பொங்கும்,ஒற்றுமை தலை தூக்கும்.       

விருச்சிகம்:

பல்வேறு கிரகங்கள் உங்களுக்கு நன்மை செய்ய  காத்திருக்கிறது.அருமையான பொருளாதார வளர்ச்சி காணப்படுகிறது.உங்களின் துணைவிக்கும் உங்களுக்கும் நல்ல புரிதல் உண்டாக்கும்.நீங்கள் ஒன்றை சொல்வதற்கு முன்னரே உங்கள் மனைவி உங்களது மனதை புரிந்துகொள்வார்.இன்று யோகமான நாளாக அமையும்.பண புழக்கம் சிறப்பாக உள்ளது.வாகனம் வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள்.இன்று நீங்கள் முழு ஆரோக்கியத்தை உணர்வீர்கள்.இன்று பணிகளை குறித்தநேரத்தில் முடிக்கும் சூழல் காணப்படும். பணிகளை விரும்பி எளிதாக ஆற்றுவீர்கள்.       

தனுசு:

உங்கள் துணையை மகிழ்விக்க சம்பவங்களை தீவிரமான போக்கில் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். இன்று உங்களிடம் ஆற்றலும் உறுதியும் நிறைந்து காணப்படும். உங்கள் புத்திசாலித்தனத்தால் வெற்றி காண்பீர்கள். யோகா மற்றும் தியானம் உதவிகரமாக இருக்கும்.பண விஷயத்தில் மிகப்பெரிய வளர்ச்சி உண்டாகும்.திருமணம் வயதில் உள்ளோர்களுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்படும் நாள்.திடீரென்று பதவி உயர்வு கிடைக்கும்,ஆக  இந்தநாள் முற்றிலும் சாதகமான நாளாகும்.

மகரம்:

உங்களின் ஆர்வத்தை மேம்படுத்தும் திட்டங்களை இன்று எடுக்கலாம்.அதிகப் பணிகள் காணப்படுவதால் பணிகளை சரியான குறித்தநேரத்தில் முடிக்க இயலாது. திட்டமிட்டு கவனமுடன் பணியாற்றினால் சிறப்பாக பணியாற்றலாம்.உங்கள் மகிழ்ச்சியான உணர்வுகளை உங்கள் துணையிடம் வெளிபடுத்துவீர்கள்.இருவரும் மகிழ்ச்சியான தருணங்களை இணைந்து கொண்டாடுவீர்கள்.  உங்கள் மனதில் காணப்படும் மகிழ்ச்சி காரணமாக இன்று நீங்கள் முழு ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள். உங்கள் திறமைகள் வெளிப்படும். அது உங்கள் செயல்திறனில் பிரதிபலிக்கும். உங்கள் சக பணியாளர்களுக்கு நீங்கள் ஒரு எடுத்துக்காட்டாக இருப்பீர்கள்.

கும்பம்:

இன்று இலக்குகளை வெல்லக்கூடிய இனிமையான தருணங்களை சந்திக்கும் நாள்.உங்கள் துணையிடம் நேர்மையாக இருப்பதன் மூலம் நல்லுறவு வளரும். இருவரிடையே பரஸ்பர புரிந்துணர்வு ஏற்படும்.இன்று சவாலான சூழ்நிலைகள் காணப்படும். உறுதியான போக்கை மேற்கொள்வதன் மூலம் நீங்கள் பிரச்சினைகளை சமாளிக்க முடியும்.பணத்தை கையாளும் போது கவனம் தேவை. இன்று ஆரோக்கியம் சுமாராக இருக்கும்.உங்கள் பணத்தை பயனுள்ள விஷயங்களுக்கு பயன்படுத்துவீர்கள். எதிர்கால சேமிப்பிற்கு அது வழிவகுக்கும்.

மீனம்:

இன்றைய நாள் உங்கள் எதிர்பார்ப்பின் படி இருக்காது. எந்த முடிவையும் எடுப்பதற்கு முன் ஒன்றிற்கு இரண்டு தடவை யோசிக்க வேண்டும்.எதிர்மறை எண்ணங்களை கைவிடுவது நல்லது.ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இன்று நீங்கள் முழு ஆரோக்கியத்தை உணர்வீர்கள்.அஜாக்கிரதை மற்றும் கவனமின்மை காரணமாக பண இழப்பு நேரலாம்,எச்சரிக்கையாக இருக்கவேண்டிய தருணம். குடும்பத்தில் அமைதி காணப்படும்.ஆற்றல் மற்றும் மன உறுதி காரணமாக உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

Share This Story

முருகானந்தம்

Top