அசாத்தியமான பலன்கள் : ஜனவரி12ல் உங்கள் இராசி நிகழ்த்தும் அற்புதங்கள்.! (விளக்கமான விபரம்)
  • 01:01AM Jan 12,2019 Tamil Nadu
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 01:01AM Jan 12,2019 Tamil Nadu

your image

 

மேஷம்:

இன்று வெற்றி பெறுவதற்கு திட்டமிட வேண்டியது அவசியம். எளிதில் வெற்றி காண்பதை கடினமாக உணரவீர்கள்.இன்று உற்சாகமாக இருப்பீர்கள். நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். புதிய மனிதர்களை சந்திப்பீர்கள்.உங்களின் ஆர்வத்தை மேம்படுத்தும் திட்டங்களை இன்று எடுக்கலாம். உங்கள் துணையுடன்  புரிந்துணர்வு ஏற்படும். மகிழ்ச்சியாக இருக்க அவருடன் அனுசரித்து நடந்துகொள்ள வேண்டும். சரியான உணவு மற்றும் நேரத்திற்கு உணவு மேற்கொள்வது நல்ல பலனளிக்கும்.செரிமானம் தொடர்பான பிரச்சனைகளுக்கு வாய்ப்புள்ளது.

ரிஷபம்:

உங்கள் பணியில் சிறந்த நல்ல பலன்கள் கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் மேலதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள்.உங்களின் திறமையான தகவல் பரிமாற்றம் மூலம் வெற்றிகரமான பலன் காண்பீர்கள்.  பணத்தை ஆன்மீக விஷயங்களுக்கு செலவு செய்யலாம். உங்களிடம் ஆற்றல் நிறைந்திருக்கும். ஆரோக்கியத்தில் எந்தப் பிரச்சினையும் இருக்காது.அஜாக்கிரதை மற்றும் கவனமின்மை காரணமாக பண இழப்பு நேரலாம்,எச்சரிக்கையாக இருக்கவேண்டிய தருணம். உங்கள் துணையை மகிழ்விக்க சம்பவங்களை தீவிரமான போக்கில் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். பணத்தை முறையாக கையாள வேண்டும்.

மிதுனம்:

இன்று உங்களிடம் ஆற்றலும் உறுதியும் நிறைந்து காணப்படும். உங்கள் புத்திசாலித்தனத்தால் வெற்றி காண்பீர்கள். இருப்பினும் மந்த நிலையும் பாதுகாப்பின்மை உணர்வும் காணப்படும்.அகந்தை உணர்வு தலை தூக்கும், துணையுடன் இந்தப்போக்கை கைவிட வேண்டும, மனம் திறந்த பேச்சின் மூலம் நன்மை விளையும்.உங்கள் தந்தையின் ஆரோக்கியத்திற்காக பணம் செலவு செய்ய நேரும். சேமிப்பதற்காக பணம் ஈட்டுவதை இன்று கடினமாக உணர்வீர்கள். யோகா மற்றும் தியானம் உதவிகரமாக இருக்கும்.

கடகம்:

இன்று சஞ்சலமான மனநிலையில் இருப்பீர்கள். தகுந்த முடிவுகளை எடுக்க இயலாது. இன்று பணிகள் அதிகமாக காணப்படும். உங்கள் துணையிடம் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். இது இருவரிடையே நல்ல புரிந்துணர்வு ஏற்பட வழி வகுக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பண விஷயத்தில் மிகப்பெரிய வளர்ச்சி உண்டாகும்.திருமணம் வயதில் உள்ளோர்களுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்படும் நாள் வந்தாச்சு ,விரைவில் லக்கின பத்திரிகை எழுதப்படும்.இன்று நீங்க நினைத்தது எல்லாமே நடக்கும் நாள்.பதவி வாய்ப்பு பலமாக காணப்படுகிறது.   

சிம்மம்:

விளையாட்டு வீரர்களுக்கு சாதகமான நாள்,வெற்றி உங்கள் வசம் வரும்.கலைத்துறையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கா இன்ப அதிர்ச்சிகள் காத்திருக்கிறது.பணி சுமை கூடுதலாக இருக்கும்.எதிர்பாரா பதவிக்கு திடீரென்று பதவி உயர்வு கிடைக்கும்,அந்த பதவியை நீங்க எதிர்பார்த்து இருக்க மாட்டீர்கள்.உங்களுக்கு முன்னர் பலர் இருக்க உங்களது கடின உழைப்பு காரணமாக உங்களை தேர்ந்தெடுத்து பதவியை கொடுப்பார்கள்.குடும்பத்தில் அமைதி காணப்படும்.ஆற்றல் மற்றும் மன உறுதி காரணமாக உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கன்னி:

உங்களின் ஆர்வத்தை மேம்படுத்தும் திட்டங்களை இன்று எடுக்கலாம்.அதிகப் பணிகள் காணப்படுவதால் பணிகளை சரியான குறித்தநேரத்தில் முடிக்க இயலாது. திட்டமிட்டு கவனமுடன் பணியாற்றினால் சிறப்பாக பணியாற்றலாம். குடும்பத்தில் நடக்கும் சுப நிகழ்ச்சிகள் உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும்.சமூகத்தில் உங்களது அந்தஸ்த்து கூடும்.உங்கள் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள நீங்கள் பணத்தை கடனாக வாங்குவீர்கள். சரியான உணவு மற்றும் நேரத்திற்கு உணவு மேற்கொள்வது நல்ல பலனளிக்கும். 

துலாம்:

பணியிடச் சூழல் உங்களுக்கு சாதகமாக இருக்கும். இன்று லாபம் நஷ்டம் இரண்டும் காணப்படும். உங்கள் சகபணியாளர்களுடன் கவனமாக உறவாடவும்.உங்கள் துணையுடன் அதிகம் பேசுவதை தவிர்ப்பது நல்லது.நீங்கள் தேவையற்ற செலவுகளை செய்ய நேரும். உங்கள் குடும்ப நண்பர்களின் ஆரோக்கியத்திற்காக மருத்துவ செலவுகள் ஏறப்டலாம். குழந்தைகளுடன் நேரம் செலவழிக்க எண்ணுவீர்கள்..வீட்டில் சுப செலவுகள் நடைபெறும்,குடும்பத்துடன் இன்ப சுற்றுலா செல்வது ,போன்று நேரத்தை செலவிடுவீர்கள்.

விருச்சிகம்:

உங்கள் சமயோசித புத்திக்கு பாராட்டு கிடைக்கும். உங்கள் துணையுடன் நல்லுறவை பராமரிப்பீர்கள். உங்கள் துணையுடன் வெளியிடங்களுக்கு செல்வதன் மூலம் மகிழ்ச்சி காண்பீர்கள். உங்கள் முயற்சியின் மூலம் அதிக பண வரவைப் பெறுவீர்கள். ஆரோக்கியம் பொதுவாக சிறப்பாக இருக்கும்.சரியான நேரத்தில் உணவு மேற்கொள்வது சிறந்த பலனைத் தரும். நிதிநிலைமை சீராக இருக்கும். உங்கள் சேமிப்பு நிலை உயரும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நீங்கள் சிறந்த ஆரோக்கியத்தை பராமரிப்பீர்கள்.

தனுஷு:

உங்களின் நிஜ ஆற்றலை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள். உங்கள் இலக்குளை நிர்ணயித்து அதனை அடைய செயலாற்றுங்கள். நீங்கள் கடினமாக பணியாற்றி உங்கள் மேலதிகாரிகளின் கவனத்தை ஈர்பீர்கள்.  பங்கு வர்த்தகம் உங்களுக்கு லாபம் அளிக்கும். இன்று உங்களிடம் ஆற்றலும் உற்சாகமும் நிறைந்து காணப்படும். இதனால் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.சரியான நேரத்தில் உணவு மேற்கொள்வது சிறந்த பலனைத் தரும்.உங்களிடம் ஆற்றலும் உற்சாகமும் நிறைந்து காணப்படும். இதனால் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மகரம்:.

நீங்கள் செய்யும் பணியும் முயற்சியும் வெற்றியைப் பெற்றுத்தரும். உங்கள் பணியில் மாற்றம் காண நேரலாம். அது உங்கள் விருப்பங்களை நிறைவேற்றும். நீங்கள் உங்கள் துணையுடன் வாக்குவாதம் செய்ய வேண்டாம். நீங்கள் வளர்ச்சி நோக்கி முன்னேறுவீர்கள். திட்டமிட்டு தொழில் சார்ந்த அணுகுமுறை மேற்கொள்வதன் மூலம் நீங்கள் வெற்றி காணலாம். உங்கள் தரத்தை உயர்த்துவதற்கு சேமிப்பு நிலையை சிறப்பாக பராமரிப்பீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கும்பம்

உங்கள் துணையிடம் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். இது இருவரிடையே நல்ல புரிந்துணர்வு ஏற்பட வழி வகுக்கும்.பணவரவு மிகவும் திருப்திகரமாக இருக்கும். அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆற்றல் மூலம் உங்கள் விருப்பங்களை பூர்த்தி செய்து கொள்வீர்கள். உங்களின் நேர்மறையான மன நிலை காரணமாக இன்று உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்,உங்கள் துணையை மகிழ்விக்க சம்பவங்களை தீவிரமான போக்கில் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.முன்னோர்களுக்கு திதி கொடுத்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவது குறித்து  குடும்பத்தில் ஆலோசனை செய்வீர்கள்.கோவிலுக்கு சென்று வருவீர்கள்.

மீனம்:

இந்த வாரம் முழுக்க உங்களுக்கு நிறைய சோதனை காத்திருக்கிறது.அனைத்தையும் எளிதில் கடந்து வந்து விடுவீர்கள்.உங்களை போல திடமான மனிதனை பார்க்க முடியாது.எவ்வளவு பணி இருந்தாலும் வீட்டையும் அலுவலகத்தையும் சரிசமமாக பேலன்ஸ் செய்வீர்கள்.திட்டமிட்டு பணிகளை ஒழுங்கமைத்து செயலாற்றுவது சிறந்தது. அலுவலகத்தில் உங்களின் அருமையை அனைவரும் அறிந்துகொள்ளும் நேரம் வந்தாச்சு.உங்களது உழைப்பிற்கு நன்மைகள் கிடைக்க உள்ளது.  இன்று அதிர்ஷ்டம் காணப்படும்.

Share This Story

You Might Also Like These
Related Stories
Top