அசாத்தியமான பலன்கள் : பிப்ரவரி10ல் உங்கள் இராசி நிகழ்த்தும் அற்புதங்கள்.! (விளக்கமான விபரம்)
  • 23:07PM Feb 09,2019 Tamil Nadu
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 23:07PM Feb 09,2019 Tamil Nadu

மேஷம்:

உங்கள் மனதில் உணர்ச்சிப்பூர்வமான எண்ணங்கள் ஓடும். உங்களிடம் காணப்படும் மகிழ்ச்சி உங்கள் பேச்சில் வெளிப்படும். பிரார்த்தனை மற்றும் வழிபாடு மேற்கொள்வதன் மூலம் உங்கள் எதிர்மறை எண்ணங்களை குறைக்கலாம். வேலை தொடர்பான பயணம் காணப்படும். கூடுதல் பணிகள் உங்களுக்கு சுமையாக தெரியும். உங்களை நிரூபிக்க நீங்கள் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள வேண்டும். உங்கள் துணையிடம் அகந்தை போக்கை காண்பிப்பீர்கள். உறவில் மகிழ்ச்சியும் அமைதியும் ஏற்பட நட்பான அணுகுமுறை மற்றும் மனம் திறந்த பேச்சு அவசியம். அதிக பொறுப்புகள் காரணமாக தேவையற்ற செலவுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

ரிஷபம்:

இன்று முன்னேற்றகரமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகள் எடுக்க இந்த நாளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இன்று அமைதியும் திருப்தியும் காணப்படும். உங்கள் திறமையை உங்கள் மேலதிகாரிகள் பாராட்டுவார்கள். உங்கள் பணிகளை மேற்கொள்ளும்போது உங்கள் தனித் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். உங்கள் துணையுடன் தரமான நேரத்தை செலவு செய்வீர்கள். உங்கள் துணையை உங்கள் நண்பர் வீட்டிற்கு அழைத்துச் செல்வீர்கள். இது உங்கள் இருவருக்கும் மகிழ்ச்சியை அளிக்கும். பண வரவு அதிகமாக இருக்கும். நீங்கள் அதிக பணம் சேமிக்கும் நிலையில் இருப்பீர்கள். இன்று உங்கள் ஆரோக்கியம் முழுமையாக இருக்கும். உங்கள் ஆற்றல் அதிகமாக காணப்படும்.

மிதுனம்:

இன்று நற்பலன்கள் காண்பதற்கு சாதகமான நாள். கடினமான சூழ்நிலையையும் எளிதாக மேற்கொள்வீர்கள். உங்களின் தன்னம்பிக்கை மூலம் வெற்றி காண்பீர்கள். பணியிடத்தில் உங்கள் பணிகளை சிறப்பாக மேற்கொள்வீர்கள். நீங்கள் உங்கள் பணிகளை ஒழுங்கு முறையுடன் மேற்கொள்வீர்கள். நீங்கள் எளிதில் உயர்நிலை அடைவீர்கள். உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையே அன்பு காணப்படும். இருவரும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வீர்கள். இனிமையான தருணங்களை ஒன்றாக பகிர்ந்து கொள்வீர்கள். நீங்கள் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்யலாம். நீங்கள் இன்று லாபம் அடையும் நாள். இன்று ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சிறந்த ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள்.

கடகம்:

உங்கள் இலக்குகளை அடைவதில் வெற்றி காண்பீர்கள். புதிய விஷயங்களைக் கற்று வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலும் உங்கள் முயற்சிகள் மூலம் மட்டுமே அது சாத்தியமாகும். பொறுமையை வளர்த்துக் கொள்ளுங்கள். பணியிடத்தில் இனிமையான சூழ்நிலை இருக்கும். நிலுவைப் பணிகளை முடிப்பீர்கள். உணர்ச்சிவசப்பட வேண்டாம். மகிழ்ச்சியை உங்கள் துணையிடம் வெளிப்படுத்துவீர்கள். நிதி வளர்ச்சிக்கு இது சாதகமான நாள். உங்கள் குழந்தைகளின் நலனுக்காக செலவு செய்ய நேரலாம்.ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

சிம்மம்:

இன்றைய செயல்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்கள் அன்றாட செயல்களில் கவனம் தேவை. பாதகமான விளைவுகள் ஏற்படாமல் இருக்க உரையாடுவதற்கு முன் யோசித்து செயல்பட வேண்டும். பிரார்த்தனை மற்றும் வழிபாடு ஆறுதல் அளிக்கும். சக பணியாளர்களை அனுசரித்து செல்வீர்கள். அவர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்வார்கள். நீங்கள் பொறுமையாக நிலைமையைக் கையாள வேண்டும். உங்கள் துணையுடன் சுமூகமான உறவு மேற்கொள்வீர்கள். நீங்கள் அவரிடம் எதிர்மறை உணர்வுகளை வெளிப்படுத்தாதீர்கள். இன்று பணப்புழக்கம் குறைந்து காணப்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கன்னி:

இன்று நற்பலனகள் கூடுதலாக கிடைக்கும். முக்கிய முடிவுகள் நல்ல பலன்களை அளிக்கும். சிறிய முயற்சிகள் கூட இன்று வெற்றியை அளிக்கும். நீங்கள் செய்யும் பணியில் சிறப்பான வளர்ச்சி பெறுவீர்கள். உங்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். உங்கள் துணையுடன் அன்பாக நடந்து கொள்வீர்கள். இதனால் அவரை நன்கு புரிந்து கொள்ள முடியும். உங்கள் கடின உழைப்பிற்கு கூடுதல் வருமானம் கிடைக்கும்.அது உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். இன்று உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.இன்று உங்களிடம் ஆற்றல் நிறைந்திருக்கும்.

துலாம் 

இன்று வளர்ச்சி காண்பதில் சற்று சிரமம் காணப்படும். ஆழ்ந்த தூக்கத்திற்கு வாய்ப்பில்லை. குழம்பிய மனம் காணப்படும். மகிழ்ச்சியாக இருக்க முயலுங்கள். தியானம் மேற்கொள்ளுங்கள். இன்றைய நாள் சற்று முடக்கமாக காணப்படும். உங்கள் செயல்களை புத்திசாலித்தனத்துடன் செய்ய வேண்டும். இன்று நீங்கள் தவறு செய்ய வாய்ப்பு உள்ளது.  மனஅழுத்தத்தின் காரணமாக உங்களுக்கு தலைவலி ஏற்பட வாய்புள்ளது.இன்று தன்னம்பிக்கையை அதிகரிக்க வேண்டும். பொறுமை இழந்து காணப்படுவீர்கள். இன்றைய நாள் முடிவதற்குள் வெற்றியை தன் வசப்படுத்துவீர்கள். உங்களிடம் காணப்படும் மனஉறுதி காரணமாக இன்றைய நாளின் பலன்கள் உங்களுக்கு சிறப்பான அனுகூலமாக இருக்கும்.

விருச்சிகம்:

நேரத்தை நிர்வகிப்பதன் மூலம் எல்லாப் பணிகளையும் குறித்தநேரத்தில் முடிப்பீர்கள். வீட்டில் சுமூகமான சூழ்நிலை காணப்படாது. தேவையற்ற வாக்குவாதங்கள் நேரலாம். இது உங்களுக்கு கவலை ஏற்படுத்தும். பூர்வீகச் சொத்து மற்றும் பங்கு வர்த்தகம் மூலம் இன்று பண வரவு ஏற்பட வாய்புள்ளது.ஆன்மீக யாத்திரைக்கு இன்றைய நாளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால் சுய விழிப்புணர்வு ஏற்படும். பணியிடத்தில் மிதமான வளர்ச்சி காணப்படும். பணிகள் அதிகமாக காணப்படும். அதற்கு உங்கள் நேரம் செலவாகும். துணைவி தரப்பில் இருந்த சொத்து விவகாரம் முடிவுக்கு வரும்,இதனால் போதுமான பணவரவு உண்டாகும்.

https://res.cloudinary.com/nissan/image/upload/q_auto,f_auto,w_400/q_auto,f_auto,w_400/q_auto,f_auto,w_400/q_auto,f_auto,w_400/q_auto,f_auto,w_400/q_auto,f_auto,w_400/q_auto,f_auto,w_400/q_auto,f_auto,w_400/q_auto,f_auto,w_400/q_auto,f_auto,w_400/q_auto,f_auto,w_400/v1547440735/mbmn_blogs/eiwy8ilxjerousolxkt3.png

தனுஷு:

இறுக்கமான அதிகப் பணிகள் உங்களுக்கு கவலை அளிக்கும். சில ஆரோக்கியப் பிரச்சினை காரணமாக இன்று உங்கள் பணிகளை விரைந்து முடிக்க இயலாது. உறவு நிலையில் குறிப்பாக உடன் பிறந்தோர்களுடனான உறவில் சில இடையூறுகள் காணப்படும். ஒரு கொள்கையோடு செயல்படுவது உதவிகரமாக இருக்கும். பணியிடத்தில் மாற்றங்களுக்கான சாத்தியம் உள்ளது. நீங்கள் பயணம் மேற்கொள்வீர்கள்.நீங்கள் அமைதியாகவும் சௌகரியமாகவும் உணரலாம். நம்பிக்கை உணர்வுகள் உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும்.

மகரம்:

அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்காது. நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். பொறுப்புகள் அதிகமாக காணப்படும்.உங்களின் அனுசரனையான அணுகுமுறை உங்களுக்கு வெற்றியை பெற்றுத் தரும். உங்கள் உறவினர்கள் மற்றும் கூட்டாளிகளுடன் நல்லுறவு காணப்படும். பணியிடச் சூழல் இன்று சிறப்பாக இருக்கும்.சில தடைகளை சந்தித்த பின் நிதிநிலைமையில் முன்னேற்றம் காணப்படும். இன்று நீங்கள் நன்மையான பலன்கள் காண புத்திசாலித்தனத்துடன் செயல்பட வேண்டும். உங்கள் திறமைகளை சிறப்பாக பயன்படுத்தி நீங்கள் உங்கள் பணியில் வெற்றி பெறுவீர்கள். இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

கும்பம்

இன்று ஆசைகள் கூட எளிதில் நிறைவேறும். உங்கள் எண்ணங்களையும் கருத்துக்களையும் உங்கள் துணையுடன் பகிர்ந்து கொள்வதற்கு இது ஒரு சாதகமான நாள்,இதனால் மணவாழ்வில் அன்பு கூடும். இன்று எதிர்மறைவிளைவுகளை சந்திக்க நேரலாம்.பணியில் கவனம் தேவை,தவறுகளுக்கு வாய்ப்புள்ளது. இருப்பினும் மேலதிகாரிகளின் ஆதரவை பெற வாய்ப்புள்ளது.குழப்பமான மனநிலையில் இருப்பீர்கள்.

மீனம்:

இன்று சற்று கடினமாக முயன்றால் பணியிடத்தில் சாதகமான சூழ்நிலை காணப்படும். உங்களின் செயல்திறன் மற்றும் சமயோசித புத்தி மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறும். இன்று ஏதேனும் ஒரு பொருளை நீங்க தொலைக்க நேரிடலாம்,அது பணமாகவும் இருக்கலாம்.சற்று கவனமாக இருக்க வேண்டிய நாள். பணியில் தரத்தை மேம்படுத்த கவனமும் விழிப்புணர்வும் அவசியம். உங்கள் துணையுடன் மோதல்கள் ஏற்படலாம். வரவை விட செலவு அதிகமாக இருக்கும்.பதட்டமான மனநிலை காணப்படும். பொறுமை அவசியம். பொழுதுபோக்கு நிகழ்சிகளைக் காண்பதன் மூலம் மன அமைதி கிடைக்கும்.

 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Share This Story

முருகானந்தம்

Top