#rajinikanth:ஒவ்வொரு பேட்டியிலும் ரஜினி வெளிப்படையாக கூறிய இதனை கவனிக்க மறந்ததா ஊடகம்! கைகூப்பி வேண்டி கேட்டுக்கொண்ட ரஜினி!
  • 19:43PM Nov 08,2019 Chennai
  • Written By AP
  • Written By AP
  • 19:43PM Nov 08,2019 Chennai

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் , உலகநாயகன் கமல்ஹாசன் ஏற்பாடு செய்திருந்த மறைந்த இயக்குனர் சிகரம் கே.பாலசந்திரன் அவர்களின் உருவச்சிலை திறப்பு விழாவில் கலந்துகொண்டு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர் சந்திப்பில் பல வதந்திகளுக்கும்  தேவைற்ற எதிர்பார்ப்புகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அவர் பேசியது, திருவள்ளுவருக்கு  காவி வண்ணம் பூசுவது போல எனக்கும் சிலர் காவி வண்ணம் பூச எண்ணுகிறார்கள்.நானும் திருவள்ளுவரும் காவி சாயத்திற்குள் மாட்ட மாட்டோம் என நகைச்சுவையாக சிரித்து கொண்டே கூறியுள்ளார்.  இவரது இந்த வெளிப்படையான பேச்சு இந்திய அளவில் கவனிக்கப்பட்டுள்ளது. 

மேலும் பிஜேபி  தங்களது ட்விட்டர் பக்கத்தில் திருவள்ளுவருக்கு காவி,பட்டை போட்டது அவர்களது தனிப்பட்ட விஷயம்,இதை இந்த அளவிற்கு பெரிதாக்க வேண்டிய அவசியம் இல்லை.   நாட்டில் எத்தனையோ பிரச்சனை இருக்கும் போது  அது தொடர்பாக விவாதம் செய்யுங்கள் என கைகூப்பி வேண்டி கேட்டுக்கொண்டார். கூறியுள்ளார் 

RJ பாலாஜி நடிகர் சங்க தேர்தலின் போதும் இதையே பத்திரிக்கையாளர் பேட்டியில் கூறியிருந்தார். இளைஞர்கள் சிலர் ஒன்றாக இணைந்து ஏரியை சுத்தம் செய்ய இறங்கியுள்ளார்கள்,அங்கு சென்று அவர்களை உற்சாகப்படுத்துங்கள் என கூறியது இன்று ரஜினி அவர்கள் கூறியதுடன் அழுத்தமாக  பதிவு செய்யப்படுகிறது. 

ரஜினி அவர்கள் பேசியது மிகவும் எதார்த்தமாகவே  இருந்தது. ஆனால் ஊடகங்கள் பிரேக்கிங் நியூஸ் அளவிற்கு கிளப்பிவிட்டுள்ளார்கள்.  ரஜினியின் அடுத்தடுத்து பேட்டிகளின் தாக்கம் மீம் கிரியேட்டர்கள் தங்களது திறமையை காட்ட ஆரம்பித்துவிட்டார்கள். அவரது சந்திப்பில் இருந்து ஒரு சில விபரங்கள் தெரியவருகிறது, பிஜேபியில் அவருக்கு நாட்டம் இல்லை என்பது தெளிவாகிறது. 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top