Lushgreen

கே.எஸ்.ரவிக்குமாரின் இந்த நிலைக்கு ரஜினி தான் காரணம்! எப்புடி இருந்த மனுஷன் இப்போ இப்படி ஆகிட்டாரே!

Oct 12 2021 05:19:00 PM

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி இயக்குனராக வளம் வந்தவர் கே.எஸ்.ரவிக்குமார். ரஜினிகாந்த், கமலஹாசன், அஜித், விஜய், சரத் குமார் என எல்லா முன்னணி நடிகர்களையும் வைத்து சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். அதுவும் ரஜினியை வைத்து இவர் எடுக்கும் படங்கள் எல்லாம் 100 நாட்களுக்கு குறைவில்லாமல் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடும்.

rajini ravikumar movie not interested

கடந்த சில வருடங்களாகவே இவர் சினிமாவில் படம் இயக்குவதை முற்றிலுமாக குறைத்துக்கொண்டார். சில படங்களில் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார். இதுக்கெல்லாம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் காரணம் என்று சினிமா வட்டாரங்களில் பேசிக்கொள்கிறார்கள்.

rajini ravikumar movie not interested

முத்து, படையப்பா போன்ற படங்கள் வெள்ளிவிழா படங்களாக திரையில் ஜொலித்தன. இவரை நம்பி மீண்டும் ரஜினிகாந்த் லிங்கா படத்தில் நடித்தார். படமும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஓரளவு பூர்த்தி செய்தது. படத்தை நேரடியாக விற்பனை செய்திருந்தால் கண்டிப்பாக படம் ஒரு மிகப்பெரிய லாபமாக அமைந்திருக்கும். ஆனால் நிறைய பேர் கைக்கு மாறி சென்றதால் சில இடங்களில் நஷ்டத்தை ஏற்படுத்தியது.

rajini ravikumar movie not interested

பின்னர் மீண்டும் இந்த கூட்டணி கோச்சடையான் படத்தில் இணைந்தது. கோச்சடையான் படத்தை கே.எஸ்.ரவிக்குமார் எடுத்திருந்தால் படம் பாகுபலி அளவிற்கு வெற்றி பெற்றிருக்கும். ரஜினியோ அவரின் மகள் பேச்சை கேட்டுவிட்டு அனிமேஷன் படமாக கோச்சடையானை எடுத்தார். வெறும் கதை, திரைக்கதை மட்டும் கோச்சடையான் படத்திற்கு எழுதி கொடுத்துவிட்டு கே.எஸ்.ரவிக்குமார் சென்றுவிட்டார். படமும் அட்டு பிளாப் ஆகிவிட்டது.

rajini ravikumar movie not interested

இந்த படத்திற்கு பின்னர் ரஜினி தன்னுடைய ஸ்டைலை மாற்றிக்கொண்டு இளம் இயக்குனர்களின் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். தொடர்ந்து இரண்டு படங்கள் பிளாப் கொடுத்ததால் இன்றுவரை அடுத்த படம் எடுக்க முடியாமல் கே.எஸ்.ரவிக்குமார் திணறி வருகிறார். தனக்கு வரும் நல்ல கதைகளில் மட்டும் நடித்துவிட்டு தன் வேலையை செவ்வனே செய்துவருகிறார். இப்பவும் கமல் மற்றும் ரஜினிகாந்திற்காக நல்ல கதை எழுதி வைத்துள்ளார். ஆனால் அவங்க இவர் படத்தில் நடிப்பாங்களா என்பது சந்தேகம் தான்.

rajini ravikumar movie not interested