Lushgreen

இப்படி ஒரு வாய்ப்பை மிஸ் பண்ணிட்டிங்களே பாஸ்! நீங்க மட்டும் இதுக்கு ஓகே சொல்லியிருந்தால் நீங்க எங்கேயோ போயிருப்பீங்க!

May 04 2021 10:03:00 AM

சிவகார்த்திகேயனை வைத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தை எடுத்த பொன்ராம் அடுத்ததாக அவரை வைத்து ரஜினிமுருகன் படத்தை இயக்கினார். முதல் படத்தை போலவே இந்தப்படமும் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது. சிவாவுடன் கீர்த்தி சுரேஷ், சூரி, ராஜ்கிரண், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் நடித்திருந்தனர். இந்த நிலையில் தற்போது ரஜினிமுருகன் படத்தை பற்றிய ஒரு சுவாரசியமான தகவல் கிடைத்துள்ளது.

rajini-murugan-aarya

முதலில் இந்த படத்தில் ஆர்யா நடிக்க இருந்தாராம். ஆர்யாவின் நெருங்கிய நண்பரான இயக்குனர் ராஜேஷிடம் உதவியாளராக வேலை பார்த்தவர் தான் பொன்ராம். ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் வேலை செய்தபோது ராஜேஷிடம் ரஜினிமுருகன் படத்தின் கதையை பொன்ராம் கூறியிருக்கிறார்.  ரஜினிமுருகன் என்ற டைட்டிலில் அட்டகாசமான ஸ்கிரிப்ட் ஒன்றை பொன்ராம் தயார் செய்திருக்கிறார். நீங்கள் விரும்பினால் கதையை கேட்டு பாருங்கள் என்று ராஜேஷ் சொல்லியிருக்கிறார்.

 

rajini-murugan-aarya

இதை பெரிதாக கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார் ஆர்யா. இதன் பிறகே சிவகார்த்திகேயனை அணுகியுள்ளார் பொன்ராம். படத்தின் டைட்டிலை கேட்டவுடன் சிவகார்த்திகேயன் ஓகே சொல்லிவிட படத்தை எடுத்து முடித்தார் பொன்ராம். படத்தின் வெளியீடு தாமதமாகிப்போனாலும் மிகப்பெரிய வெற்றியை ரஜினிமுருகன் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.