நேற்றைய தினம் சௌந்தர்யாரஜினிகாந்த் -தொழில் அதிபர் விசாகன் இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியிருந்தது. இந்த புது தம்பதியின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி சென்னையில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் பங்கேற்க முக்கிய பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட உறவினர்களுக்கும் பிரபலங்களுக்கும் விதைப்பந்துகள் அடங்கிய பரிசு அன்பளிப்பாக கொடுப்பட்டுள்ளது. இது பலரையும் கவர்ந்துள்ளது.