Lushgreen

விஜய் பாலிசியை பின்பற்றும் ரஜினிகாந்த்! தமிழ் சினிமாவுக்கு நல்ல காலம் பொறந்துருச்சு போலயே!

May 04 2021 04:23:00 PM

தமிழ் சினிமாவில் தளபதி விஜய் தனக்கென தனி ரசிகர் பட்டாளம் வைத்துள்ளார். இவர் சினிமாவில் நடிக்க வந்த புதிதில் இருந்தே புதுமுக இயக்குனர்கள் நிறைய பேரை தேர்வு செய்து அவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பார். இவர் நடித்த பாதிப் படங்களுக்கு மேல் புதுமுக இயக்குனர்களே அந்த படத்தை எடுத்தவர்களாக இருப்பார்கள். அந்த அளவுக்கு தளபதி புதுமுக இயக்குனர்களின் மேல் நம்பிக்கை வைத்துள்ளார்.

rajini follows vijay policy

தற்போது கூட அட்லீ, லோகேஷ் கனகராஜ் போன்ற புதுமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வெற்றியும் பெற்றார். தற்போது விஜய் நடித்து வரும் தளபதி 65 படம் கூட நெல்சன் என்னும் புதுமுக இயக்குனரே இயக்குகிறார். இவர் இதற்கு முன்னர் கோலமாவு கோகிலா, டா க்டர் போன்ற படங்களை எடுத்திருந்தார். நடிகர் விஜய்யை போலவே ரஜினிகாந்த்தின் பார்வையும் தற்போது புதுமுக இயக்குனர்களின் மேல் படத் துவங்கியுள்ளது.

rajini follows vijay policy

டைரக்டர் பா.ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ் போன்ற புதுமுக இயக்குனர்களுக்கு அவர்களின் அனுபவத்தைப் பார்க்காமல் அவர்களின் திறமையைப் பார்த்து வாய்ப்பு கொடுத்தார். அண்மையில் கண்ணும் கண்ணும் கொ ள்ளை அடித்தால் என்ற ஒரு படம் வெளிவந்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றது. இந்த படத்தைப் பார்த்த ரஜினிகாந்த் உடனே அந்த படத்தின் டைரக்டருக்கு போன் செய்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

rajini follows vijay policy

அதுமட்டுமல்லாமல் அந்த டைரக்டரை தனது வீட்டிற்கே அழைத்து பாராட்டியுள்ளார். உங்ககிட்ட இது மாதிரி ஏதாவது வித்தியாசமான கதை இருந்தா சொல்லுங்க என்று கேட்டுள்ளார். உடனே ஒரு ஒன் லைன் கதை ஒன்றை ரஜினியிடம் கூறியுள்ளார். இந்த விஷயம் நடந்து முடிஞ்சு இப்போ ஆறு மாசம் ஆகுது.

rajini follows vijay policy

இப்போது மீண்டும் அந்த தேசிங்கு பெரியசாமிக்கு போன் செய்து அந்த ஒன் லைன் கதை சொன்னீங்கள்ல, அத கொஞ்சம் டெவலப் பண்ணுங்க, படம் பண்ணலாம் என்று ரஜினி தேசிங்கு பெரியசாமியிடம் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எது எப்படியோ முன்னணி நடிகர்கள் பெரிய இயக்குனர்களின் மொ க்கை கதைகளில் நடிக்காமல் இதுபோன்ற புதுமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் தமிழ் சினிமா நல்ல பாதையில் போக வாய்ப்புள்ளது.

rajini follows vijay policy