பேட்ட வெளியானதையொட்டி தியேட்டர் முன் ரசிகரின் வித்தியாசமான செயல்..?இந்த அளவுக்கு ரசிகரா இருக்கமுடியுமா..?? ரஜினியின் பேட்டி.
  • 11:59AM Jan 11,2019 Chennai
  • Written By AP
  • Written By AP
  • 11:59AM Jan 11,2019 Chennai

ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நேற்று வெளியானது பேட்ட...படத்தின் ஒவ்வொரு காட்சியையும் அடுத்து என்ன நடக்க போகிறது என்ற ஆர்வத்துடன் எடுத்து சென்றுள்ளார் இயக்குனர்.ஓவர் பில்டப் இல்லாமல் அசால்ட்டாக மாஸான தரமான காட்சிகளை அமைத்துள்ளனர்.ரஜினியின் யங் லுக் ரசிகர்களுக்கு அன் லிமிட்டட் மீள் தான்..

ரசிகர்களும் எப்போதும் போல கட்டவுட்,பாலாபிஷேகம் என இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாக ரஜினியை கொண்டாட ஆரம்பித்து விட்டனர்.நாகர்கோவிலில் நேற்று 69 பானைகளில் பொங்கல் வைத்து கொண்டாடியுள்ளனர், ஏன் இந்த 69 என யோசிக்கிறீங்களா? ரஜினின் தற்போதைய வயது 69,அதனாலே இந்த 69 பானைகள்..இதனையடுத்து சென்னையில் உள்ள பிரபல தியேட்டரில் பேட்ட வெளியான நேற்று, தியேட்டர் முன்னிலையில் ரசிகர் ஒருவர் திருமணம்செய்துகொண்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று மாலை நிருபர்களை சந்தித்து பேசிய ரஜினி , பேட்ட படத்திற்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது தனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.அடுத்து இயக்குனர் குறித்து, எல்லா புகழும் கார்த்திக் சுப்புராஜூக்குதான்.ஏனெனில் ஒவ்வொரு ஷாட்டும் , உசுப்பேற்றி உசுப்பேற்றி பண்ண வைத்துவிட்டார்,ஆக இயக்குனருக்கு தான் அனைத்து பாராட்டுக்களும் சேர வேண்டும் என கூறியுள்ளார்...

Share This Story

You Might Also Like These
Related Stories
Top