டிசம்பர் 31 ரஜினி என்ன சொல்லப் போகிறார் 5 யூகங்கள்!!!
 • 12:54PM Dec 27,2017 chennai, Tamil Nadu
 • Written By KV
 • Written By KV
 • 12:54PM Dec 27,2017 chennai, Tamil Nadu

ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்று அவரின் ரசிகர்கள் மட்டுமல்ல தமிழகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. புத்தாண்டுக்கு அவர் என்ன பரிசு தரப் போகிறார் என்று அனைத்துத் தரப்பும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இதுவரை அவர் கூறியது, நடந்தது அனைத்தையும் வைத்து மிக சிறந்ததாகத் தோன்றிய 5 சாத்தியக் கூறுகளைக் கொடுத்துள்ளோம். உங்களுக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதை அவர் ஸ்டைலில் படிக்கவும். கூடவே அந்தப் பதில் வருவதற்கான காரணங்களும் உங்களுக்கா

       ரசிகர்கள் பல்வேறு கட்சியில் இருப்பதால் தனது ரசிகர்கள் தன் முடிவால் அதிருப்தி அடைந்துவிடக் கூடாது என்று ரஜினி நினைத்தால் அவர் சொல்லப் போவது.

       "போர் வர மாதிரி இருக்கு... எனக்கு அரசியலை விட உங்கள்ல ஒருத்தனா இருக்கிறதுதான் பிடிச்சிருக்கு... உங்க கூட நான் இருக்கேன். அதுக்காகப் பயந்து போறேன்னு நினைக்க வேண்டாம். எத்தனையோ நல்ல இளைஞர்கள் மாற்றத்தைத் தேடி போராடுறாங்க. நாம அவங்கள ஜெயிக்க வைப்போம். நண்பர் கட்சியை ஆரம்பிச்சா, அதுக்கு ஆதரவு கொடுப்போம். போரையும் பார்த்த மாதிரி ஆச்சு, உங்க கூடயும் இருந்த மாதிரி ஆச்சு!!! என்ன நான் சொல்றது?"

       அரசியலுக்கு வருவது என்று முடிவு செய்து விட்டால், ரசிகர் மன்றங்கள் அவற்றின் தலைவர்கள் தங்களுக்கும் பொறுப்புகளை எதிர்பார்க்கத் துவங்கி விடுவார்கள். ஆனால், அவர்களின் அனுபவம் அரசியல் நடத்த போதாது என்று ரஜினி நினைக்கும் பட்சத்தில், யாருக்கும் மனஸ்தாபம் வராமல் இருக்க.

       "நான் அரசியலுக்கு பயப்படல... வந்துட்டேன்... என்ன? போருக்கு தயாராகிட்டேன். எந்த ஒரு ராஜாவுக்கும் போர்ல ஜெயிக்க நல்ல தளபதி, வீரர்கள் வேணும். அவங்களை எனக்கு அடையாளம் கண்டுபிடிச்சுக் கொடுக்க, என் ரசிகர்கள்... என் உயிரினும் மேலான ரசிகர்கள்தான் உங்க பக்கத்தில இருக்கிற நல்லவங்களை, சமுதாயத்துக்காக போராடுற இளைஞர்களை எனக்கு அடையாளம் காட்டனும். ஏன்னா நீங்க இல்லைனா நான் இல்லை... நீங்கதான் எனக்கு இந்த இடத்தைக் குடுத்தீங்க, அந்த இடத்தையும் குடுப்பீங்கங்கற நம்பிக்கை எனக்கிருக்கு"

       தினகரன் எதிர்பாராத வெற்றியைப் பெற்றதை அடுத்து, திராவிட கட்சிகளுக்கு மக்களிடம் செல்வாக்கு குறைந்ததாக எண்ணி அரசியலுக்கு வர முடிவெடுத்திருந்தால், அதுவும் தானே கட்சி ஆரம்பித்து வழி நடத்த முடிவு செய்து விட்டால் அவர் சொல்லக் கூடியது.

           "என் ஒவ்வொரு ரசிகனுக்கும் நான் கடமை பட்டிருக்கிறேன். என் ஆண்டவன் அவங்கதான். இப்போ என் ஆண்டவர்கள் என்னை அரசியலுக்கு வரச் சொல்றாங்க, இதோ வந்துட்டேன்... நம்ம யாரு வழிக்கும் போறதில்லை... எப்படின்னா... நம்ம வழி எப்பவுமே தனி வழிதான். என் கட்சி பேரு................. எப்படி, ஹேப்பியா? நாம யாரையும் குறை சொல்ல இங்க வரலை... நமக்குன்னு என்ன இருக்கோ அதை ஆண்டவன் நிச்சயமா நமக்குத் தருவான், உங்களைக் குடுத்த மாதிரி”

       புறக்கணிக்க முடியாத வதந்தியாக பாஜக நிலைப்பாடு எடுக்க ரஜினி முடிவு செய்தால், அதை உடனடியாக ஒப்புக் கொள்ள மாட்டார். ஏற்கெனவே அவரது நண்பர் கமல் சூடு வாங்கி இருப்பதால் அதை வேறு விதமாகக் குறிப்பிடுவார்.

        

       “திராவிட கட்சிகள் நம்மை ஆண்டவை, அதில நான் மதிக்கற எத்தனையோ தலைவர்கள் இருந்தாங்க, இருக்காங்க.  ஆனால், இப்போ மக்கள் மனசில தப்பான அபிப்ராயம் வளர்ந்துட்டு இருக்கு.  அவங்க நம்பின கொள்கைல அவங்க ஆட்சி செஞ்சாங்க. நான் பாபா வழில மக்களை வழி நடத்தனும்னு நினைக்கிறேன்.  கொஞ்சம் ஆன்மிகம் அரசியல்ல இருந்தா தப்பில்லைன்னு நினைக்கிறேன். அந்தப் பாபா மேல பாரத்தைப் போட்டு ஒரு நல்ல ஆட்சிக்காக நாம இந்த கட்சியை ஆரம்பிக்கிறோம். எல்லாம் அவன் செயல்.”

        

       சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சி நடத்திய கருத்துக் கணிப்பில் 50% மக்கள் ரஜினி படத்தை விளம்பரப்படுத்த இப்படிச் செய்வதாக வாக்களித்ததாக வெளியிட்டது.  ஒரு வேளை அது உண்மையென்றால், அவர் இதைத்தான் சொல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

        

       “ரசிகர்கள் வேற, நான் வேற இல்லை. உங்களால மட்டும்தான் நான் இப்போ இங்க நிக்கறேன். நமக்கு அரசியல் வேண்டாம். தேவையில்லாம என்னால ஒரு ரசிகன் சங்கடப்பட்டாலும் எனக்குப் பிடிக்காது.  அதுக்காக எதை வேணும்னாலும் என்னால தூக்கி எறிஞ்சிட முடியும்.  நான் நின்னா, சி.எம். ஆயிடுவேன்னு ஜோஸியக்காரங்க சொன்னதா படிச்சேன்.  அது உண்மையே ஆனாலும், எனக்கு வேண்டாம்.  உங்களை சந்தோஷப்படுத்த இந்த ரஜினி இருக்கான்.  உங்களுக்காக தொடர்ந்து என்னால முடியற வரைக்கும் நான் நடிச்சுட்டுதான் இருப்பேன். என் மேல நம்பிக்கை வச்ச ரசிகர்கள் வருத்தப்படுவாங்கன்னுதான் இந்த 5 நாளை அவங்களுக்காக முழுசா, முழுசா ஒதுக்கிட்டேன். நான் பயப்படலை, பதவி, செல்வாக்கு எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சுட்டேன் என் ரசிகர்களுக்காக. காலாவையும், எந்திரனையும் தாண்டி நான் நடிக்கப் போற அத்தனை படங்களையும் உங்களுக்காக அர்ப்பணிக்கிறேன்.”

        

              இதெல்லாம் வெறும் கற்பனைதான். இருந்தாலும் எங்க சுத்தினாலும் இந்த 5 விஷயத்துக்குள்ளதான் சுத்தனும். அதனாலதான் இந்தக் கட்டுரையே. மொத்தத் தமிழ்நாடும் அவரையேதான் பார்த்துட்டிருக்கு. என்னதான் நடக்குதுன்னு பார்த்திடுவோமே!!! இது எப்படி இருக்கு.

       You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
       Top