Misc

மற்ற பாம்புகளை விட ராஜநாகம் மட்டும் ஏன் தனித்தன்மை பெற்று விளங்குகிறது? மற்ற பாம்புகளை போல ஏன் நம்மால் ராஜநாகப் பாம்புகளை அதிக அளவில் பார்க்க முடிவதில்லை?

Jun 14 2021 10:34:00 PM

ராஜநாகம் இந்தியாவில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் அதிகம் காணப்படுகிறது. அதேபோல இந்தோனேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் உள்ள காடுகளிலும் அதிக அளவு வசிக்கிறது. 18 அடி நீளம் வரை வளரும் அதிக வி ஷத் தன்மை கொண்ட பாம்பு ராஜநாகம் மட்டுமே. தனது உடலின் நீளத்தில் மூன்றில் ஒரு பங்கு உயரம் தலையை உயர்த்தும் சக்தி கொண்ட பாம்பு இந்த ராஜநாகம் தான்.

raja naagam india

காடுகளில் மட்டுமே இந்த பாம்பு அதிக அளவில் இருப்பதால் மனிதர்களை இந்த பாம்பு க டிப்பதில்லை. ஒரு முறை வனவிலங்குகளை படம் எடுக்கும் நபர் தெரியாமல் இந்த ராஜநாகப் பாம்பை மிதித்து அவரை க டித்ததால் அவர் இ றந்து விட்டார் என்ற செய்திகள் பல வருடங்களுக்கு முன்னர் வெளியானது. அந்த இ றப்பு மட்டுமே இந்த பாம்பால் இ றந்த ஒரு மனிதர் என்று சொல்லப்படுகிறது. எப்போதுமே மேற்கு தொடர்ச்சி மலைகளில் இருப்பதால் மனிதர்களை இந்த பாம்பு அதிக அளவில் தொ ல்லை செய்வதில்லை.

raja naagam india

ஆனால் கடந்த சில வருடங்களாக மனிதர்கள் காட்டை ஆ க்ரமிக்கத் தொடங்கியதால் கோவை, பழனி போன்ற இடங்களில் மனிதர்கள் நடமாடும் பகுதிகளில் இந்த பாம்பை அடிக்கடி பார்ப்பதாக சொல்கிறார்கள். ராஜநாகம் எப்போதும் மற்ற பாம்புகளை மட்டுமே தனது உணவாக விரும்பி சாப்பிடுமாம். அதுவும் சாரைப்பாம்பு என்றால் ராஜநாகத்துக்கு அவ்வளவு இஷ்டமாம். ஒரு முறை ஒரு பாம்பை விழுங்கிவிட்டால் மீண்டும் தனது அடுத்த இரையை தேட 7 நாட்கள் எடுத்துக்கொள்ளும்.

raja naagam india

சாதாரணமாக ஒரு பாம்பு தனது வாசனை திறன் மூலம் இரையை கண்டுபிடித்து வே ட்டையாடும். ஆனால் இந்த ராஜநாகம் பாம்புக்கு பார்வைத்திறன் மிக அதிகமாக இருக்கும். 100 அடிக்கு அந்தப் பக்கம் வரும் தனது இரையை தன் கூர்மையான பார்வை மூலம் கண்டறிந்து மரங்களின் மீது ஏறி அந்த இரை தனது அருகில் வந்தவுடன் வே ட்டையாடும் சக்தி இந்த ராஜநாகத்துக்கு உள்ளது.

raja naagam india