GROUP D EXAMS: ரயில்வே துறை GROUP D தேர்வு முடிவுகள்!!! வடமாநிலத்தவர் தேர்வு சதவிதம் 90%!!! முறைகேடு புகார்!!!
  • 17:16PM Mar 06,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 17:16PM Mar 06,2019 Chennai

சென்னையில் நடைபெற்ற ரயில்வே துறை GROUP D தேர்வில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது. ரயில்வே துறையில் GROUP D பிரிவில் மொத்தம் 62,907 பணியிடங்களை நிரப்ப கடந்த ஆண்டு எழுத்து தேர்வு நடைபெற்றது. செப்டம்பர் 17 முதல் டிச.17-ம் தேதி வரை நடைபெற்ற இந்த தேர்வுக்காக இந்தியா முழுவதும் 1 கோடிக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். சென்னையில் மட்டும் 16 மண்டலங்களில் 1550 பணியிடங்கள் நிரப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, தேர்வு முடிவுகள் கடந்த மார்ச் 4-ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த முடிவுகள் தமிழகத்தை சேர்ந்த தேர்வர்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. வடமாநிலத்தவர்களின் மதிப்பெண்ணை ஆய்வு செய்ததில் தேர்வில் மோசடி நடைபெற்று இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தேர்வின் மொத்த மதிப்பெண்கள் 100 என்று இருக்கும் நிலையில் கவுகாத்தி, சண்டிகர், அகமதாபாத் போன்ற வடமாநில நகரங்களை சேர்ந்தவர்களுக்கு மட்டும் 102, 109, 354 என மதிப்பெண்களை வாரி வழங்கி இருக்கின்றனர்.

தமிழகத்தின் சென்னை மண்டலத்தில் நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வில், தமிழக வரலாறு, கலாச்சாரம், இயற்கை அமைப்புகள் குறித்த கேள்விகள் அதிகம் இடம் பெறுவது வழக்கம். அதனைப் புரிந்து கொண்டு தேர்வு எழுதி வடமாநிலத்தவர்கள் வெற்றி பெறுவது எளிதானது அல்ல என்று கூறப்படுகிறது. ஆனால் தற்போது நடைபெற்ற GROUP D தேர்வில் 90% வடமாநிலத்தவர்கள் தேர்ச்சி பெற்று இருப்பதாகத் தமிழகத்தை சேர்ந்த தேர்வர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த மோசடி குறித்து உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நியாயமான முறையில் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்றும் தமிழகத்தை சேர்ந்த தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மத்திய அரசுக் கட்டுப்பாட்டில் ரயில்வேத் துறை இருப்பதால் தொடர்ச்சியாக இது போன்ற நடவடிக்கைகள் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது.

ரயில்வே கோட்டம் ஒதுக்குவதில் இருந்து அனைத்து விதங்களிலும் ரயில்வே துறை தமிழக நலனுக்கு எதிராகவே செயல்படுவது வாடிக்கையாகி விட்டது. கோவை கோட்டத்தை பாலக்காட்டுக்கு மாற்றியது போன்ற தொடர் செய்கைகளில் இத்தனை நாட்கள் தேர்வில் மட்டும்தான் கைவைக்காமல் இருந்தனர், இப்போது அதிலும் வடமாநிலத்தவர்களுக்கு முன்னுரிமை அளித்து தமிழகத் தேர்வர்களின் ஒட்டுமொத்தக் கனவையும் சீர்குலைக்க கங்கணம் கட்டிக் கொண்டு வேலை செய்து வருகிறது. இதற்கு அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து வலுவான எதிர்ப்பைப் பதிவு செய்யாவிட்டால், அப்புறம் தமிழர்கள் கொஞ்சம் கொ|ஞசமாக மத்திய அரசின் வேலைவாய்ப்பினை மறந்து விட வேண்டியதுதான். தேர்தல் வரும் நேரத்தில், இந்தப் பிரச்சினை எழுப்பப்பட்டால் மட்டுமே இனியேனும் இது போல நடக்காமல் பார்த்துக் கொள்ள முடியும்!!!

Top