#RAILWAYEMPLOYMENT: APPRENTICE பணிகளுக்கு இனி தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை!!! முடிவுக்கு வந்த வடமாநிலத்தவர் பிரச்சினை!!!
  • 17:32PM May 25,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 17:32PM May 25,2019 Chennai

தமிழகத்தில் உள்ள ரயில்வே தொழிற்சாலைகளில் APPRENTICE பணி நியமனங்களில் ரயில்வே விதிகளை இதுவரை பின்பற்றப்படாமல் இருந்து வந்தன. இதனால் வட இந்தியர்கள் பணிகளில் சேர துவங்கினர். இதனால் தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்பு திட்டமிட்டுப் பறிக்கப்படுவதாகக் கடுமையான குற்றச்சாட்டு எழுந்தது. சமீபத்தில் திருச்சி பொன்மலை, கோவை போத்தனூர் ரயில்வே தொழிற்சாலை APPRENTICE EXAM-ல் ஏற்கனவே 1984-ம் ஆண்டு வாரிய உத்தரவின்படி, வசிப்பிடத் தகுதி நிர்ணயம் செய்யப்படாததால்தான் வடமாநிலத்தவர்களின் சேர்க்கை அதிகமாக மூல காரணமாக அமைந்து விட்டது.

ரயில்வே விதிகள் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்களையே APPRENTICE பணிகளுக்குத் தேர்வு செய்ய வேண்டும் என விதி இருப்பதைத் தொழிற்சங்க தலைவர்கள் பல்வேறு பத்திரிகைகளின் வாயிலாகத் தெரிவித்து வந்தனர். இதனால், 1984-ம் ஆண்டு ரயில்வே வாரிய உத்தரவின்படி, அந்த விதியைப் பின்பற்றி, TAMILNADU EMPLOYMENT EXCHANGE-ல் பதிவு செய்தவர்கள் மட்டுமே மேற்கூறிய பணியிடங்களுக்குத் தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

|

இதையடுத்து, ஏற்கெனவே 80% வடமாநிலத்தவர்களாக இருந்த தேர்வு முறை தள்ளி வைக்கப்பட்டு, கடந்த மே 20-ம் தேதி பெரம்பூர் ICF தொழிற்சாலை - CARPENTER 80, ELECTRICIAN 200, FITTER 260, MACHINIST 80, PAINTER 80, WELDER 290 என மொத்தம் 990 APPRENTICE-களின் நியமனத்திற்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அதில் TAMILNADU EMPLOYMENT EXCHANGE- ல் பதிவு செய்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்ற நிபந்தனையை இணைத்து விட்டது. இதனால் 990 APPRENTICE-கள் தமிழகத்தில் இருந்து மட்டுமே தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். இதனைச் சற்று காட்டமாகவே பதிவு செய்திருந்த தினகரன் மற்றும் இதர பத்திரிகைகளுக்கு இவர்கள் நன்றி சொல்லத்தான் வேண்டும்!!!

Kancheepuram Court Jobs   |  National Highway Jobs  |  Indian Ordinance Jobs  |  Company Secretaryship  |  Ghost Village  |

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top